Skip to main content

Posts

Showing posts from November, 2008

கொங்கு வட்டார வழக்கு: ஐந்தாம் பாகம்

1.அந்தப்பொறம் - அந்தப்பக்கம் 2.அந்தான்டே - அந்தப்பக்கம் 3.அள்ளையில் - பக்கத்தில் 4.இன்னிக்கு - இன்றைக்கு 5.உச்சாணி - உச்சி 6.உம்மை - உண்மை 7.ஓசனை - யோசனை 8.ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல் 9.கண்ணாலம் - திருமணம் 10.கமுத்தி - கவிழ்த்தி 11.குக்கு - உட்கார் 12.குறுக்காட்டி - வழி மறித்தல் 13.கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை 14.தொறப்புக்கை - திறவுக்கோல் 15.தோண்டி - குடம் 16.காத்தாலை - விடியற் காலை 17.கிச்சு - அக்குள் 18.சாங்கியம் - சடங்கு 19.செலவாந்தரம் - பழமொழி 20.தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன் 21.தடுக்கு - ஒலையில் செய்த கீற்று 22.பம்பாதே - பதுங்காதே 23.பிப்பு - அரிப்பு எடுத்தல் 24.முச்சி - முறம் 25.மசையன் - விவரமற்றவன் 26.மப்பு - போதை, மங்கல் 27.வக்கு - வசதி 28.வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம் 29.உப்புசம் - புழுக்கம் 30.வளுசல்