Skip to main content

Posts

அமராவதிக் கரையோரம்

இந்த வலைத் தளத்தை அடிக்கடி திறந்து பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக பதிவுகள் இல்லாமல் இருக்கும் இந்த பிளாக்கைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பர் இளவஞ்சியின் நினைவு வந்து போகிறது. அவர் பணி நிமித்தமாக யூ.எஸ் சென்ற பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. பழைய பதிவர்கள் உதயகுமார் போன்றோரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தெரியவில்லை.இந்தத் தளத்தில் ஏதேனும் பதிவிட்டால் யாராவது கண்ணில் பட்டு விடாதா என்ற நப்பாசை.. கொங்குச் சீமையைப் பிண்ணனியாகக் கொண்ட ஒரு பதிவை இங்கே மீள்பதிவு செய்கிறேன். ******** இது ஒரு மெகா சீரியல். இப்போது நாம் பார்க்கவிருப்பது அதில் ஒரு எபிசோடு. முந்தைய பகுதிகளைப் பார்க்காமல் இதைக் கண்டால் புரியாது என்பதால் பின்னணி என்ற பெயரில் ஒரு முன் கதைச் சுருக்கம். நாற்பத்து மூன்று வீடுகளே உள்ள சின்னஞ்சிறு கிராமம் செல்லப் பிள்ளை புதூர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும், இப்போது பால் சொசைட்டியாக இயங்கும் பழைய திண்ணைப் பள்ளிக்கூடக் கட்டிடமும், அவை இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பார்த்து அமராவதி ஆற்றை நோக்கியபடி ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் ம
Recent posts

பீளமேடு - பழைய நினைவுகள் ( மீள்ப‌திவு )

( செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய இடுகையை இங்கே அவ‌ரின் அனும‌தியுட‌ன் இட்டுள்ளேன்.ப‌ழைய‌ நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுக‌ம் தான்.) ***************************************************************************** கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம்

ஐந்து நாள் அனுபவங்கள்.

அ க்டோபர் 7, 2K8-ல் எழுதியது. *** * பு தன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன். * லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன். ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ