Tuesday, December 9, 2008
கொங்கு வட்டார வழக்கு - ஏழாவது பாகம்
1.அவியொ - அவர்கள்
2.உங்குனாலே - உங்களாலே
3.அட்டி - கழுத்தில் அணியும் அணி
4.அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு
5.அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை
6.அதிக்களம் - ஆணவம்
7.அல்லை - இடுப்பு
8.எரப்பாணி - இரந்து உண்ணுபவன்
9.எருக்காலி - பயந்து நடுங்குவன்
10.ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம்
11.ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம்
12.ஒடை அடித்தல் - காயடித்தல்
13.ஒவை - மரக்கிளையை அசைத்தல்
14.ஓடை - மேட்டு நிலம்
15.ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி
16.கடக்கால் - அடித்தளம்
17.கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம்
18.கோயல் - கோவில்
19.கச்சல் - குழப்பம், நைந்து விடுதல்
20.கடையாணி - அச்சாணி
21.கந்தர கோலம் - அலங்கோலம்
22.கருமாந்திரம் - திட்டும் சொல்
23.கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி
24.குக்கல் - நாய்
25.காந்து - வெயிலின் மிகு வெப்பம்
26.கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு
27.கூச்சம் - மரத்தூண்
28.கெடாரி - மாடு
29.கெடை - ஓரிடத்தில் அதிக நேரம் அல்லது நாட்கள் இருப்பது
30.கொட்டமுத்து - விளக்கெண்ணெய்
31.கொட்டு முழக்கு - மேள தாளம்
32.சித்தை - சிறிது நேரம்
33.சூரி - கூரிய நீண்ட மடக்குக் கத்தி
34.சீலெ - சேலை
35.சங்கடை - குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கு
36.சப்படை - தட்டை வடிவம்
37.சாமி சாட்டு - கோவில் திருவிழா தொடங்குதல்
38.சீமை எண்ணெய் - kerosene
39.சீன்றம் - ஒழுங்கற்ற புதர்
40.சுத்திப் போடு - திருஷ்டி கழித்தல்
41.சுளுக்கு - நரம்புப் பெயர்ச்சி
42.செருவு - கவலை
43.தட்டுவாணி - பொறுப்பற்றவன்
44.தெய்யக்கடை - தையல் கடை
45.தண்டுவன் - திருமணமாகாதவன்
46.தாட்டி - தடவை
47.திடுமுட்டி - ஊருக்குச் செய்தி சொல்பவன்
48.தொப்பை - வயிறு, புளியம்பழத்தோல்
49.நவுத்து - நகர்த்து
50.நொள்ளிக்கண் - குருட்டுக்கண்
51.நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
52.நஞ்ச சோறு - பழைய நைந்த சோறு
53.நீர்ச்சீலை - கோவணம்
54.நெட்டை - விரல்களை பின்னால் மடக்கினால் உண்டாகும் ஒசை
55.நெலவு - கதவு
56.பம்புதல் - பதுங்குதல்
57.பெருக்கான் - பெருச்சாளி
58.மேக்காலே - மேற்குப்பக்கத்தில்
59.மச்சாண்டாரு - கணவனின் அண்ணன்
60.மகுடம் - கண்ணில் விழும் திரை
61.முகாமி - தானாவதி , முன்நின்று செய்பவர்
62.மேவு - ஆடுமாடு மேய்ச்சலுக்கு வைக்கப்படும் புல்
63.மோளி - அழுக்கு துணியை அளவைக் குறிக்கும் சொல்
64.லோலாக்கு - காதணி
65.வைரி - விரோதி
66.மிந்தி - முன்னால்
67.மொல்ல - மெதுவாக
68.ஒசரத்து - உயரத்தில்
69.பொழங்குவது - பயன் படுத்துவது
70.வெய்வது - திட்டுவது
71.கம்மியாக - குறைவாக
72.பொறவால - பின்னாலே
73.சேந்துவது - தண்ணீர் இறைப்பது
74.கொன்னி - திக்கி
75.பினாத்தல் - உளறல்
76.அடப்பு - வழியை தடுப்பது அதுவும் தண்ணீர் செல்வதை
77.அடிப்பிடிக்கும் - தண்ணீர் இல்லாததால் பானையில் அரிசி பிடித்துக் கொள்வது
78.அண்ணாந்துப் பாரு - மேலே பாரு
79.அண்ணாந்துக் குடி - வாயில் படாமல் குடித்தல்
80.அணாமத்து - யாரும் சொந்தமில்லாதது
81.அத்துபடி - அனைத்தும் தெரிந்த நிலை
82.அத்துரு - அறுத்து விடு
83.அதட்டுவது - மிரட்டுவது, கண்டிப்பது
84.அதாச்சா - அது முடிந்து விட்டதா
85.அதுக்குள்ளேயா - உடனடியாகவா
86.அந்திருச்சு - அறுந்து விட்டது
87.அரப்பு - தலைக்கு போட்டு குளிக்கும் பொருள
88.அரக்கப்பரக்க - சரியாகச் செய்யாமல்
89.அல்லாரும் - அனைவரும்
90.ஆத்திர அவசரத்துக்கு - தேவைப்படும் நேரத்தில்
91.ஆயிருச்சி - முடிந்து விட்டது
92.ஆற அமர - மெதுவாக
93.மை கோதி - தலை கோதுவது
94.வாக்கணம் - தாளிப்பதறகும் காய்ச்சுவதற்கும் பயன்படுத்துவது
95.ஒத்தாசை - உதவி
96.கடவாய் - வாயின் ஒரப்பகுதி
97.கண்டமேனிக்கு - கண்ட படி
98.கழஞ்சு - அரிசியை நீரில் கழுவுவது
99.காணாதை - பார்க்காதை
100.வெயில் தாழ -வெயில் குறைவாக இருக்கும்பொழது
கொங்கு வட்டார வழக்கு - ஆறாவது பாகம்
1.அக்கியானம் - தொல்லை, தொந்தரவு
2.அச்சாணியம் - அபச குணம்
3.அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால்
4.ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள்
5.அம்பிலி - சோளக்கூழ்
6.இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி
7.இத்தாச்சோடு - மிகப்பெரிய
8.ஊடு - வீடு
9.ஊங்காரம் - காற்றின் ஓசை
10.ஊசை - கொட்டுப் போனது
11.ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
12.எசிரி - போட்டி
13.எடங்காடு - insufficient space
14.எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர்
15.ஏகடியம் - கேலி, கிண்டல்
16.ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர்
17.ஒரப்பு - குண்டாகு
18.ஒரம்பு - ஈரநிலம்
19.ஒடம்பு - உடம்பு
20.ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல்
21.ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர்
22.கடும்பு - சதை போடுதல்
23.கரடு - சிறு குன்று
24.குண்டு - இரைப்பை
25.கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி
26.சிலுப்புதல் - தயிர் கடைதல்
27.தொணெ - துணை
Tuesday, November 25, 2008
கொங்கு வட்டார வழக்கு: ஐந்தாம் பாகம்
1.அந்தப்பொறம் - அந்தப்பக்கம்
2.அந்தான்டே - அந்தப்பக்கம்
3.அள்ளையில் - பக்கத்தில்
4.இன்னிக்கு - இன்றைக்கு
5.உச்சாணி - உச்சி
6.உம்மை - உண்மை
7.ஓசனை - யோசனை
8.ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல்
9.கண்ணாலம் - திருமணம்
10.கமுத்தி - கவிழ்த்தி
11.குக்கு - உட்கார்
12.குறுக்காட்டி - வழி மறித்தல்
13.கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை
14.தொறப்புக்கை - திறவுக்கோல்
15.தோண்டி - குடம்
16.காத்தாலை - விடியற் காலை
17.கிச்சு - அக்குள்
18.சாங்கியம் - சடங்கு
19.செலவாந்தரம் - பழமொழி
20.தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன்
21.தடுக்கு - ஒலையில் செய்த கீற்று
22.பம்பாதே - பதுங்காதே
23.பிப்பு - அரிப்பு எடுத்தல்
24.முச்சி - முறம்
25.மசையன் - விவரமற்றவன்
26.மப்பு - போதை, மங்கல்
27.வக்கு - வசதி
28.வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம்
29.உப்புசம் - புழுக்கம்
30.வளுசல் - சிறுவன்
31.சொள்ளை - கொசு
32.தப்பரது - துணி துவைத்தல்
33.கொமரி - வயசுப் பெண்
34.ஆசாரம் - வீட்டின் மையப்பகுதி ( Hall )
35.மேப்படி - கதவின் மேலுள்ள பகுதி ( loft )
Monday, September 22, 2008
தெரியுமுங்களா-2
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நடிகருங்க பத்தின கேள்வி பதில் தானுங்க. இன்னிக்கு சத்யராஜ் பத்தின கேள்விங்க மட்டும்.
1) சத்யராஜோட இயற்பெயர் என்னான்னு தெரியுங்களா?
2) கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க?
3) அவரு படிச்ச கல்லூரி?
4) மொதோ படம் எதுங்க?
5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க?
6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?
1) சத்யராஜோட இயற்பெயர் என்னான்னு தெரியுங்களா?
2) கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க?
3) அவரு படிச்ச கல்லூரி?
4) மொதோ படம் எதுங்க?
5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க?
6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?
Wednesday, April 30, 2008
Tuesday, February 26, 2008
வேதாத்திரி மகரிஷி சிந்தனைகள்-1
கடமை
நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்.
உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.
Monday, February 18, 2008
Monday, January 28, 2008
மணிக்கூண்டும், மணி கவிதையும்
Friday, January 11, 2008
ஆழியாறு
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத
வண்ணமிகு இடம்
காணும் காட்சி
கண்ணுக்கு விருந்து,
கற்பனைக்கு ஊற்று,
இதயத்திற்கு இதம் தரும்.
இயற்கைக்கு தான் எத்தனை அழகு
இறைவா
இறைஞ்சிடு
இன்னோரு வாழ்வை
இந்த அழகைத்தான் சுவைத்திட
உன்னைக்கண்டதும்
ஓவியன் என்றால்
தூரிகைக்கொண்டு
ஓவியம் வரைந்திருப்பான்.
கவிஞன் என்றால்
எழுத்தாணிக்கொண்டு
கவிதை எழுதிருப்பான்.
Subscribe to:
Posts (Atom)