Skip to main content

Posts

Showing posts from August, 2007

படம் போடுறோம் பாருங்க-1

பேரூர் கோயில் PSG TECH TOWNHALL UKKADAM BUSTAND CROSSCUT ROAD ஈச்சனாரி விநாயகர் கோவில் காந்திபுரம் சாம்பார் இட்லிக்கு அண்ணபூர்ணாதான் விமான நிலையம்

பொங்கி வரும் காவேரி.

செ ன்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள். அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி : காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி : கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு : நுரையாடி வரும் காவேரியன்னை : சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் : முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் : துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் : திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் : வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் : அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் : வேத முனி : வெற்றி முகம் காட்டும் வீரன் : முன்மண்டபம் : கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் : கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு : திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தி

கொங்கு வட்டார வழக்கு: நான்காம் பட்டியல்

கொங்கு நாட்டு மொழிவழக்கின் நான்காவது பட்டியல் இது. சொற்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. . நான் பேசிய சொற்கள், என்னிடம் புழங்கிய மொழியை தொலைத்துக் கொண்டிருக்கிறேன். 1. மொனவாத - முணுமுணுக்காத 2. மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது. 3. சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான் நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :) 4. மம்மானையா - மென்மேலும் 5. இண்டம் புடிச்சவன் - கஞ்சன் 6. பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற? 7. மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன். 8. சுளுவா - சுலபமாக 9. வெட்ருப்பு - கடுகடுப்பு அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா. 10. சிலுவாடு - சிறு சேமிப்பு உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு. 11. தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி 12. மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா. டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா. 13. மாதாரி - சக்கிலி. 14. வெறுமானம் - அமாவாச

ஆடி நோம்பி....

தீபாவளி,பொங்கலுக்கு அடுத்து ஆவலோட எதிர்பார்த்திட்டு இருக்கிற நோம்பி இந்த ஆடி நோம்பி தான்.காவிரி சூலூர் பக்கம் பாயலைங்கறதுக்காக ஆடி நோம்பியைக் கொண்டாடாம இருக்க முடியுமா??மே மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பின்னாடி வர்ர மொத லீவு இந்த ஆடி நோம்பிக்குத்தான்.இது தான் முக்கிய காரணமின்னாலும் தூரியாடறது,பட்டம் உடுறது,தேங்காயை வாட்டி சாப்பிடறதுன்னு இந்த நோம்பியை எதிர்பார்த்திட்டு இருக்க இன்னும் பல காரணங்கள் இருக்கு. ஆடி 18 என்ன கெழமை வருதுன்னு அப்பா ஒரு மாசம் முன்னாடி பார்த்து சொல்லுவாரு.எங்க அத்தை ஊட்டுக்குப் போறதா இல்லை அவங்க இங்க வருவாங்களான்னு ஒரு பத்து நாளைக்கு வீட்டில பெரியவங்க டிஸ்கஷன் பண்ணுவாங்க.முடிவென்னமோ எப்பயும் போல அவங்க இங்க வருவாங்கன்னு தான் எடுப்பாங்க.அப்புறம் வழக்கம் போல எங்க அத்தை,மாமாவை நோம்பிக்குக் கூப்பிட எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வருவாரு. அம்மியே பறக்கர மாதிரி அடிக்கற ஆடிக்காத்தில தூரி கட்டி ஆடாட்டி அப்புறம் அந்தக் காத்துக்கு என்ன மருவாதை?நோம்பிக்கு முன்னாடியே, வெள்ளிக்கெழமை சந்தையில போயி தண்ணி சேர்ந்திற கயிறு வாங்கிட்டு வந்து வச்சிருப்பாரு.எனக்கு ஒண்ணு,ஒடம்பொறப்ப

பதில் சொல்ல முடியுமா?-1

அட என்னங்க. நாங்களே எங்க ஊரை பத்தி சொல்லிட்டு இருந்தா, இதெல்லலாம்தான் எங்களுக்குத் தெரியும்னு எங்க ஊர் மக்கள் மாதிரியே குசும்பு பண்றீங்க. அதனாலதான் எங்க ஊரைப்பத்தி நீங்க என்ன தெரிஞ்சு வெச்சு இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கிறதுக்காக இந்த கேள்விகள் 1. கொங்கு மண்டலத்துல பொறந்து வளர்ந்த அந்த பெரிய விஞ்ஞானி யாரு? 2. கோவைக்கு பக்கத்துல இருக்கிற பிரசித்த பெற்ற முருகக்கடவுள் கோயில் எது? 3. கோவையில படிச்சு இன்னைக்கு மென்பொருள் துறையில முதல் 10 இடத்துக்குள்ளே இருக்கும் அந்த தொழிலதிபர் யாரு? அவர் நடத்தும் நிறுவனத்தின் பெயர் என்ன? 4. PSG கலைக்கல்லூரியில் வேதியியல் படிச்சு தங்கப்பதக்கம் வாங்கின நடிகர் யாரு? 5. PSG கலைக்கல்லூரியில் படிச்சு நடிகராகி இருக்கிற இவர் ஒரு பெரிய அரசியல்வாதியின் பேரன். யார் இவர்?

இன்று தீர்ப்பு!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று (ஆகஸ்ட் 1-ம்) தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இத்தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். ரூ.100 கோடி வரை பொருட் சேதம் ஏற்பட்டது. பலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை 2002ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது. அனைத்து விசாரணைகளும் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 பேருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் இன்றைய தினம் தெரிய வரும்.குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம், என நீதிபதிகள் கடந்த 27ம் தேதி ஆலோசனை நடத்தினர். நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதால், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆக