Skip to main content

Posts

Showing posts from November, 2007

உன் குற்றமா.. என் குற்றமா..?

வி றுவிறுவென குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. மலைமுகடுகளின் விளிம்புகள் எங்கும் கருமேகங்கள் குழாம் இட்டிருந்தன. மலையின் பின்புறம் மழை பெய்து கொண்டிருந்ததால், காற்றில் ஈரம் மிகுந்திருந்தது. கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது. "அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா. ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம். ஏ ஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண். "கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அரு

கோவை-சேலம் தொழிற்சிறப்பு சாலை (Industrial Corridor of Excellence)

இருவாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையின் படி முதல் கட்டமாக சென்னை-மணலி-எண்ணூர், செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் ஆகிய சாலைப்பகுதிகள் தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கோவை-சேலம், மதுரை-தூத்துக்குடி சாலைப்பகுதிகளும் இரண்டாம் கட்டமாக தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தபப்டும் என்று சொல்லப்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட அரசாணையின் படி கோவை-சேலம் சாலையின் நடுப்பகுதிகளான திருப்பூரும் ஈரோடும் (தேசிய நெடுஞ்சாலையில்ருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும்)மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது இந்த திட்டத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது. இந்தியாவிலேயே ஒரு 160 கிலோமீட்டர் தொலைவுக்குள் நான்கு மாநகராட்சிகள் வேறு எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காவிரி பாயும் ஈரோடின் சுமார் 10-20 கிமீ பகுதியைத்தவிர்த்து இந்த 160 கிமீட்டருமே இயற்கை ஏய்த்துவிட்ட வறட்சியான பகுதிகளே. இந்த வறட்சியே இப்பகுதி மக்களின் தொழில் ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணி. பெரும்பாலும் எந்த மத்திய-மாநில அரசு

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 5, 2007

இம்மாத இறுதிக்குள் சாலை வசதி மேம்பாட்டுக்கான தீர்க்கமான திட்டங்கள் வரைவது பூர்த்தியாகும் : கோவையில் தலைமைச் செயலாளர் திரிபாதி. அன்னூர், சிறுமுகை சாராய வியாபாரிகள் சரண், 'காய்ச்சமாட்டோம்' என உறுதிமொழி. தீபாவளி கூட்டத்துக்கு தீர்வு: கோவை, திருப்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விசேடப் பேருந்துகள். மயில்களைப் பாதுகாக்க பாரதியார் பல்கலைக் கழகத்தில் பூங்கா அமைக்கப்படும்.

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 4, 2007

உக்கடம் (வாலாங்குளம்) மேம்பாலம்: ஒருவழிப்பாதையில் போக்குவரத்து தொடக்கம். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனை போலீஸ் தேடுகிறது. ரேடியோ மிர்ச்சியைத் தொடர்ந்து ஹலோ எஃப். எம். பண்பலை கோவைக்கு வருகிறது. கல்லாறு தூரிப்பாலம் 30 நாளில் பழுதுபார்க்கப்படும்

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 2, 2007

இன்று செய்திகள் அதிகமில்லை! பொள்ளாச்சியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - சேலம் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்காததை எதிர்த்து. (சேர்த்திருந்தால், கோட்டத்துக்கு கோவை (அ) பொள்ளாச்சியைத் தலைமையிடமாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்திருப்பார்களோ?) கோவை மாநராட்சி கலையரங்கத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் : மேயர் வெங்கடாசலம் (இடத்துக்கும் ஊருக்கும் ஆள் பெயர் வைப்பதெல்லாம் ஒரு சுற்று போய் அடங்கியிருக்கிறது. பழையபடி அதைத் தொடங்கி வைக்கணுமா? ஒரு கலையரங்கத்துப் பெயருக்குள்ள திருவள்ளுவர் பெருமை அடங்காது) ரயில்வே லாபத்துக்கு காரணம் லாலு அல்ல; வேலுதான்: சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் ( தினமலர் இதைச் சொல்வதால் கொஞ்சம் காரண காரியங்களை ஆராய்வேண்டியுள்ளது)

கொங்கு செய்திகள் - நவ. 1, 2007

சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம். உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு. கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்சி்கள் கொங்கு வட்டார வழக்கிலேயெ அதிகம் இருக்கும்