Skip to main content

நம்ம ஊரு...நல்ல ஊரு...

அய்யாமார்களே,அம்மாமார்களே...

உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.

1.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்
அ)கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
கணபதி சில்க்ஸ்
அடையார் ஆனந்த பவன்
சென்னை சில்க்ஸ்

ஆ)கற்பகம்
நிர்மலா
அவினாசிலிங்கம்
விசாலட்சி

2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.

3.ஹோப் காலேஜ் : கோவையிலிருந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?

4.இணைந்த கைகள் வெளியானதால்,மூடப்பட்ட திரையரங்கம் எது?

5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.

6."இணையாத பாலம்.இருந்தென்ன லாபம்" - சமீபகாலத்தில் பிரபலமான இந்த ஸ்லோகன் எந்த பிரச்சினையை நினைவூட்டுகிறது??

Comments

Anonymous said…
1.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்
அ)அடையார் ஆனந்த பவன்
ஆ)விசாலட்சி
2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.
Gandhipark, Gandhipark
Rajaveethi Girls School, Presenattion Convent(townhall), St Josph's Convent, St Mary's Convent, Nirmala College...
3.ஹோப் காலேஜ் : கோவையிலிருந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?
Dead (Setha College)
4.இணைந்த கைகள் வெளியானதால்,மூடப்பட்ட திரையரங்கம் எது?
Shanthi (due to a death in ticket Counter)
5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.
Sakthi Groups
Krishna Sweets
Chennai Silks
6."இணையாத பாலம்.இருந்தென்ன லாபம்" - சமீபகாலத்தில் பிரபலமான இந்த ஸ்லோகன் எந்த பிரச்சினையை நினைவூட்டுகிறது??
Noyyal?????
I am not in the country for 10+ years (Living in US) but watch and Invest only in my Coimbatore

Kongu Vellalan




PS...Vellalan, who does farming still)
1)எப்படி போட்டால்ம் பதில் குழப்புதுங்கோவ்....

2)ஹி ஹி ஹி கற்பகம் தான் நம்மவூட்டு பக்க்கமுங்க...

3) காந்தி பூங்கா
புரந்தராதாசர் கலையரங்கம்
டி.பி ரோடு (போஸ்ட் ஆபீஸ், சவிதா ஹால்)
வடகோவை
பவர் ஹவுஸ்
கற்பகம் காம்ப்ள்க்ஸ்(100 அடி ரோடு போஸ்ட் ஆபீஸ்)
ஜி.பி தியேட்டர்
காந்திபுரம்ம் பேருந்து நிலையம்
நஞ்சப்ப்பா ரோடு
வா.ஊ சி பார்க்
கேஜி
ரேஸ்கோர்ஸ்
தாம்ஸ் பார்க்
புலியகுளம்
கார்மல் கார்டன்
சுங்கம்
ரெயின்போ
பெரிய ஆஸ்ஸ்பத்திரி
டவுன் ஹால்
வைசியாள் வீதி
தேர் முட்டி
விநாயகர் கோயில்
காந்தி பூங்கா.

மாப்ள சுத்தி பார்த்த மாதிரி இருக்குதுபா...

4) சாந்தி தியேட்டரிலே நான் முதல் முதல்லா பார்த்தது நேருக்கு நேர்
5) ஏபிடி பார்சல்
லட்சுமிகுரூப்ஸ்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
6)
தெரியலீங்க!! நானும் ஊரைவிட்டு ஓடியாந்துட்டேன்.. ஆங்...
Udhayakumar said…
1. அடையார் ஆனந்த பவன்
1. விசாலாட்சி
2. காந்தி பார்க், டிபி ரோடு, வடகோவை, காந்திபுரம், பவர் ஹவுஸ், கற்பகம் காம்ப்ள்க்ஸ், காந்திபுரம், புளிய குளம், சுங்கம், ஜிஹெச், டவுன் ஹால், காந்திபார்க்
3. ஜிடி நாயுடு ஆரம்பிச்ச GCT க்கு ஆரம்ப கால் பெயர் ஹோப்ஸ் காலேஜ் ன்னு நினைக்கிறேன்.
4.
ABT
கிருஷ்ணா சுவீட்ஸ்
நீல்கிரீஸ்
5. ஊரை விட்டு வந்து 5 வருஷத்துக்கும் மேல ஆச்சு :-(
எல்லாரும் 4க்கு மட்டும் சரியா சொல்லிட்டு 5 வத விட்டுட்டாங்க. சரி நான் சொல்லறேன். கோவையில சிங்காநல்லூர் பக்கத்துல ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டறாங்க கட்டறாங்க கட்டிகிட்டேயிருக்காங்க கடந்த 3 வருசமா. இன்னும் முடியல ரெண்டு சைட்லயும் கட்டிட்டு ரயில்வே பாதை மேல மட்டும் இன்னும் இணைக்காம இருக்காங்க. அதை கண்டித்து கடந்த மாதம் பண்ணிட்டு வர போராட்டத்தில் வரும் வாசகம்தான் இது.
சரிங்களா?
Anonymous said…
ஜிடி நாயுடு தான் ஆரம்பிச்ச காலேஜுக்கு, அப்ப இருந்த மதராஸ் பிரசிடன்சி கவர்னர் சர் ஆர்தூர் ஹோப் பேர வெச்சாரு. அதுக்கப்புறம் அரசாங்கம், அத எடுத்து ந்ன்னு பேர மாத்தி, காலேஜையும் தடாகத்துக்கு மாத்திட்டாங்க.
Anonymous said…
// Seven is heaven//

Routes 7 and 5, only rides entire city(Coimbatore City Corportation). But Only No 7 Connects major cinima theatres[kennady,maruthi, central & kanakathara(used to be),karpagam complex, geethalaya, apsara, ambal complex, KG complex, Royal and Raja Theatre], VOC Park and girl's schools.
G.Ragavan said…
மொதக் கேள்விக்கு மட்டும் விடை சொல்றேன். சென்னை சில்க்ஸ். அடையாறு ஆனந்தபவன் கோயமுத்தூர்க்காரங்கன்னு நெனைக்கிறேன்.

மத்ததுக்கெல்லாம்...நான் இந்த ஆட்டைக்கே வரலை.
ilavanji said…
மக்களே,

இந்த பதிவினை எழுதியது கொங்குராசா! ஏதோ ப்ளாகரு கோளாருல என் பேருக்கு கீழாக வருது. உங்களுக்கு பதிலளிக்க அவரை வரச்சொல்லறேன் :)
Rangs said…
5 th Q kku bathil solraen..

Pricol,
ELGI,
LMW,
CRI pumps,
Sigma Link,
Texmo,
Indo Shell Mould,
CAG,
Lakshmi Mills,
Premier Mills,
Suguna Poultry Farms..

Innum romba irukkudhungnov!

rangaraj

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)