Skip to main content

வேதாத்திரி மகரிஷி சிந்தனைகள்-1





கடமை



நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்.

உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

Comments

Anonymous said…
I like your attitude about life. I enjoy reading your post. Keep posting.

Ravi
தமிழ் said…
நன்றி ரவி
sury siva said…
//எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்//


கொங்குவாசலா இது ?
இல்லவே இல்லை.

அங்கெங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாகி
ஆனந்தபூர்த்தியாகி
அருள் பாலிக்கும் = என்
ஆண்டவன் வாசல் =திருத்
தாண்டவன் வாசல்

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com
தமிழ் said…
This comment has been removed by the author.
வாழ்வது ஒருமுறை
அதை பிறருக்காக வாழு
அதுதான் அர்த்தமுள்ள வழ்வு.
அருமை கருத்துகளும் படங்களும்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
//நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும்.//

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

இப்படி வழும் மாமனிதர் கோவையில்
http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_24.html