Skip to main content

Posts

Showing posts from 2013

அமராவதிக் கரையோரம்

இந்த வலைத் தளத்தை அடிக்கடி திறந்து பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக பதிவுகள் இல்லாமல் இருக்கும் இந்த பிளாக்கைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பர் இளவஞ்சியின் நினைவு வந்து போகிறது. அவர் பணி நிமித்தமாக யூ.எஸ் சென்ற பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. பழைய பதிவர்கள் உதயகுமார் போன்றோரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தெரியவில்லை.இந்தத் தளத்தில் ஏதேனும் பதிவிட்டால் யாராவது கண்ணில் பட்டு விடாதா என்ற நப்பாசை.. கொங்குச் சீமையைப் பிண்ணனியாகக் கொண்ட ஒரு பதிவை இங்கே மீள்பதிவு செய்கிறேன். ******** இது ஒரு மெகா சீரியல். இப்போது நாம் பார்க்கவிருப்பது அதில் ஒரு எபிசோடு. முந்தைய பகுதிகளைப் பார்க்காமல் இதைக் கண்டால் புரியாது என்பதால் பின்னணி என்ற பெயரில் ஒரு முன் கதைச் சுருக்கம். நாற்பத்து மூன்று வீடுகளே உள்ள சின்னஞ்சிறு கிராமம் செல்லப் பிள்ளை புதூர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும், இப்போது பால் சொசைட்டியாக இயங்கும் பழைய திண்ணைப் பள்ளிக்கூடக் கட்டிடமும், அவை இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பார்த்து அமராவதி ஆற்றை நோக்கியபடி ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் ம