Skip to main content

Posts

Showing posts from 2007

பொன்னி வள நாட்டின் பெருமை..!

கொ ங்கு நாட்டின் பெருமைகளைப் பற்றி அமெரிக்க அம்மணி ஒருவர் புத்தகமும், இணைய வலையும் அமைத்துள்ளார். கவனிக்கவும். http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007123050210500.htm&date=2007/12/30/&prd=mag& http://www.legendofponnivala.com/

கோயம்புத்தூர் குசும்பு.

ந ம்ம ஊர்க்கார பயலுகளுக்கு இருக்கற லொள்ளு இருக்கே... அதாங்க லொள்ளு..லொள்ளு... அதுக்கு அளவே இல்லீங்க... நீங்களே பாருங்க... இது உள்ளூரு சில்லி புரோட்டா.... இது வெளியூரு கொத்து புரோட்டா....

உன் குற்றமா.. என் குற்றமா..?

வி றுவிறுவென குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. மலைமுகடுகளின் விளிம்புகள் எங்கும் கருமேகங்கள் குழாம் இட்டிருந்தன. மலையின் பின்புறம் மழை பெய்து கொண்டிருந்ததால், காற்றில் ஈரம் மிகுந்திருந்தது. கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது. "அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா. ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம். ஏ ஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண். "கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அரு

கோவை-சேலம் தொழிற்சிறப்பு சாலை (Industrial Corridor of Excellence)

இருவாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையின் படி முதல் கட்டமாக சென்னை-மணலி-எண்ணூர், செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் ஆகிய சாலைப்பகுதிகள் தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கோவை-சேலம், மதுரை-தூத்துக்குடி சாலைப்பகுதிகளும் இரண்டாம் கட்டமாக தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தபப்டும் என்று சொல்லப்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட அரசாணையின் படி கோவை-சேலம் சாலையின் நடுப்பகுதிகளான திருப்பூரும் ஈரோடும் (தேசிய நெடுஞ்சாலையில்ருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும்)மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது இந்த திட்டத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது. இந்தியாவிலேயே ஒரு 160 கிலோமீட்டர் தொலைவுக்குள் நான்கு மாநகராட்சிகள் வேறு எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காவிரி பாயும் ஈரோடின் சுமார் 10-20 கிமீ பகுதியைத்தவிர்த்து இந்த 160 கிமீட்டருமே இயற்கை ஏய்த்துவிட்ட வறட்சியான பகுதிகளே. இந்த வறட்சியே இப்பகுதி மக்களின் தொழில் ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணி. பெரும்பாலும் எந்த மத்திய-மாநில அரசு

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 5, 2007

இம்மாத இறுதிக்குள் சாலை வசதி மேம்பாட்டுக்கான தீர்க்கமான திட்டங்கள் வரைவது பூர்த்தியாகும் : கோவையில் தலைமைச் செயலாளர் திரிபாதி. அன்னூர், சிறுமுகை சாராய வியாபாரிகள் சரண், 'காய்ச்சமாட்டோம்' என உறுதிமொழி. தீபாவளி கூட்டத்துக்கு தீர்வு: கோவை, திருப்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விசேடப் பேருந்துகள். மயில்களைப் பாதுகாக்க பாரதியார் பல்கலைக் கழகத்தில் பூங்கா அமைக்கப்படும்.

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 4, 2007

உக்கடம் (வாலாங்குளம்) மேம்பாலம்: ஒருவழிப்பாதையில் போக்குவரத்து தொடக்கம். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனை போலீஸ் தேடுகிறது. ரேடியோ மிர்ச்சியைத் தொடர்ந்து ஹலோ எஃப். எம். பண்பலை கோவைக்கு வருகிறது. கல்லாறு தூரிப்பாலம் 30 நாளில் பழுதுபார்க்கப்படும்

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 2, 2007

இன்று செய்திகள் அதிகமில்லை! பொள்ளாச்சியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - சேலம் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்காததை எதிர்த்து. (சேர்த்திருந்தால், கோட்டத்துக்கு கோவை (அ) பொள்ளாச்சியைத் தலைமையிடமாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்திருப்பார்களோ?) கோவை மாநராட்சி கலையரங்கத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் : மேயர் வெங்கடாசலம் (இடத்துக்கும் ஊருக்கும் ஆள் பெயர் வைப்பதெல்லாம் ஒரு சுற்று போய் அடங்கியிருக்கிறது. பழையபடி அதைத் தொடங்கி வைக்கணுமா? ஒரு கலையரங்கத்துப் பெயருக்குள்ள திருவள்ளுவர் பெருமை அடங்காது) ரயில்வே லாபத்துக்கு காரணம் லாலு அல்ல; வேலுதான்: சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் ( தினமலர் இதைச் சொல்வதால் கொஞ்சம் காரண காரியங்களை ஆராய்வேண்டியுள்ளது)

கொங்கு செய்திகள் - நவ. 1, 2007

சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம். உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு. கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்சி்கள் கொங்கு வட்டார வழக்கிலேயெ அதிகம் இருக்கும்

இன்றைய செய்திகள்: - அக் 31, 2007

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும் உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது. சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில ச்சூ ச்சூன்னு விளிக்கண்டா

கி்ராஸ்கட் ரோடில் ஸ்டேஷனரிக் கடையில் புத்தகம் (இவர் புத்தக்கக்கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சார்னு் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை, இது த.நா.பா.நூ.நி. வெளியீடு;-) வாங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேட்டன் 'ச்சூ ச்சூ' என்று கடைக்காரரை அழைக்க, அவர் சொன்னது இது. பாலக்காட்டுப் பக்கத்துல ஒருவர் கவனத்தைக் கவர இப்படி ஓசையிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரப்பயணத்தில் போகக்கூடிய இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியை அந்தக் கேரளத்து நண்பரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'சாரி, சாரி' என்று ஏற்கனவே இதை அறிந்தும் மறந்தவர் போல அசடு வழிந்தார். 'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ

எக்சிபிசன்ல வாங்குனதா?

சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும். அப்ப சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாதா, பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்ககூட உண்டு. சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், ... இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதோ ஒண்ணு அங்க இருந்துச்சு. இப்பவும் ந்டக்குது, ஆனா அத்தனை கூட்டத்தைக் காணோம். பிறகு மக்கள் போனஸ் வாங்கும் சமயம் கையில காசு புரள்றதைத் தெரிஞ்ச சில சுறுசுறுப்பானவங்க 'வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி' அப்படிங்கற மாதிரி ஒண்ணை வ.உ.சி. பார்க் மைதானத்தில் நடத்த ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பசையுள்ள பார்ட்டிகள் மட்டுமே வருவதாலோ என்னமோ கூட்டம் கம்மியா இருக்கும். புதுசு புதுசா மார்க்கெட்ல என்ன பொருள் வந்துருக்குதுங்கறதத் தெரிஞ்சுக்க மக்களுக்க

செம கட்டடங்க

உடல வருத்தி வேலை செய்யறவங்களுக்கு உடற்பயிற்சி எல்லாம் தேவை இல்லீங்க. கோயமுத்தூர்ல பணக்காரங்க அதிகமா இருக்கிற இடம் ரேஸ் கோர்ஸ். இங்கே இருக்கிறவங்க கண்டிப்பா உடல் பயிற்சி பண்ணித்தானே ஆவனும். அப்புறம் என்ன? சும்மாங்காச்சும் ஒரு டவுசரை போட்டுகிட்டு, ஷீ ஒன்ன மாட்டிகிட்டு, காதுக்குள்ள பாட்டு கேக்குற பொட்டிய சேர்த்துக்கிட்டு வசதியா ஓடுவாங்க. வேர்க்க விறுவிறுக்க ஓடுவீங்கன்னு நினைப்பீங்க, ஆனா அதுதான் இல்லே, சும்மா நாலு எட்டு வெச்சுட்டு, யாராவது தெரிஞ்சவங்க வந்தா அமைதியா பேசிட்டே நடப்பாங்க. அப்படியே KGக்கு பக்கத்துல இருக்கிற கெளரி சங்கர்ல ஒரு காபி குடிச்சுட்டு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருவாங்க. இப்போ நாங்க சொன்னதுக்கும், கீழே இருக்கிற படங்களுக்கும் சம்பந்தமேயில்லே. கீழே இருக்கிற படங்கள் எல்லாம் கோவை ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சுத்தி கட்டப்பட்டு இருக்கும் உலக புகழ் வாய்ந்த மினி சைஸ் கட்டடங்கள், சும்மா உங்க பார்வைக்கு. Here is the project Link Source: Binarywaves

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

படம் போடுறோம் பாருங்க-1

பேரூர் கோயில் PSG TECH TOWNHALL UKKADAM BUSTAND CROSSCUT ROAD ஈச்சனாரி விநாயகர் கோவில் காந்திபுரம் சாம்பார் இட்லிக்கு அண்ணபூர்ணாதான் விமான நிலையம்

பொங்கி வரும் காவேரி.

செ ன்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள். அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி : காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி : கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு : நுரையாடி வரும் காவேரியன்னை : சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் : முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் : துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் : திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் : வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் : அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் : வேத முனி : வெற்றி முகம் காட்டும் வீரன் : முன்மண்டபம் : கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் : கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு : திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தி