Skip to main content

Posts

Showing posts from December, 2008

கொங்கு வட்டார வழக்கு - ஏழாவது பாகம்

1.அவியொ - அவர்கள் 2.உங்குனாலே - உங்களாலே 3.அட்டி - கழுத்தில் அணியும் அணி 4.அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு 5.அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை 6.அதிக்களம் - ஆணவம் 7.அல்லை - இடுப்பு 8.எரப்பாணி - இரந்து உண்ணுபவன் 9.எருக்காலி - பயந்து நடுங்குவன் 10.ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம் 11.ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம் 12.ஒடை அடித்தல் - காயடித்தல் 13.ஒவை - மரக்கிளையை அசைத்தல் 14.ஓடை - மேட்டு நிலம் 15.ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி 16.கடக்கால் - அடித்தளம் 17.கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம் 18.கோயல் - கோவில் 19.கச்சல் - குழப்பம், நைந்து விடுதல் 20.கடையாணி - அச்சாணி 21.கந்தர கோலம் - அலங்கோலம் 22.கருமாந்திரம் - திட்டும் சொல் 23.கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி 24.குக்கல் - நாய் 25.காந்து - வெயிலின் மிகு வெப்பம் 26.கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு

கொங்கு வட்டார வழக்கு - ஆறாவது பாகம்

1.அக்கியானம் - தொல்லை, தொந்தரவு 2.அச்சாணியம் - அபச குணம் 3.அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால் 4.ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள் 5.அம்பிலி - சோளக்கூழ் 6.இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி 7.இத்தாச்சோடு - மிகப்பெரிய 8.ஊடு - வீடு 9.ஊங்காரம் - காற்றின் ஓசை 10.ஊசை - கொட்டுப் போனது 11.ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு 12.எசிரி - போட்டி 13.எடங்காடு - insufficient space 14.எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர் 15.ஏகடியம் - கேலி, கிண்டல் 16.ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர் 17.ஒரப்பு - குண்டாகு 18.ஒரம்பு - ஈரநிலம் 19.ஒடம்பு - உடம்பு 20.ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல் 21.ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர் 22.கடும்பு - சதை போடுதல் 23.கரடு - சிறு குன்று 24.குண்டு - இரைப்பை 25.கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி 26.சிலுப்புதல் - தயிர் கடைதல் 27.தொணெ -