Skip to main content

Posts

Showing posts from September, 2007

செம கட்டடங்க

உடல வருத்தி வேலை செய்யறவங்களுக்கு உடற்பயிற்சி எல்லாம் தேவை இல்லீங்க. கோயமுத்தூர்ல பணக்காரங்க அதிகமா இருக்கிற இடம் ரேஸ் கோர்ஸ். இங்கே இருக்கிறவங்க கண்டிப்பா உடல் பயிற்சி பண்ணித்தானே ஆவனும். அப்புறம் என்ன? சும்மாங்காச்சும் ஒரு டவுசரை போட்டுகிட்டு, ஷீ ஒன்ன மாட்டிகிட்டு, காதுக்குள்ள பாட்டு கேக்குற பொட்டிய சேர்த்துக்கிட்டு வசதியா ஓடுவாங்க. வேர்க்க விறுவிறுக்க ஓடுவீங்கன்னு நினைப்பீங்க, ஆனா அதுதான் இல்லே, சும்மா நாலு எட்டு வெச்சுட்டு, யாராவது தெரிஞ்சவங்க வந்தா அமைதியா பேசிட்டே நடப்பாங்க. அப்படியே KGக்கு பக்கத்துல இருக்கிற கெளரி சங்கர்ல ஒரு காபி குடிச்சுட்டு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருவாங்க. இப்போ நாங்க சொன்னதுக்கும், கீழே இருக்கிற படங்களுக்கும் சம்பந்தமேயில்லே. கீழே இருக்கிற படங்கள் எல்லாம் கோவை ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சுத்தி கட்டப்பட்டு இருக்கும் உலக புகழ் வாய்ந்த மினி சைஸ் கட்டடங்கள், சும்மா உங்க பார்வைக்கு. Here is the project Link Source: Binarywaves

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்