Skip to main content

Posts

Showing posts from July, 2009

ஐந்து நாள் அனுபவங்கள்.

அ க்டோபர் 7, 2K8-ல் எழுதியது. *** * பு தன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன். * லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன். ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ

பண்ணாரிக்குப் போனேன்.

செ ன்ற ஞாயிற்றுக்கிழமை (Feb 22, 2K9) அதிகாலை 10:30 மணிக்கு பாலாஜி வந்தான். 'இன்னும் ரெடியாகலியா..?' என்று கேட்டபடியே படுக்கையில் விழுந்தான். அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே பிறகே குளிக்கச் சென்று, குளித்து விட்டு, எல்லா துணிகளும் நீரோடு செம்புலப் பெயலாக கலந்து விட்டபடியால் ஒரு பழைய டீ ஷர்ட்டை அணிந்து கொண்டேன். சொல்லப்போனால், இன்னும் முன்னதாக எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் போட்டிருந்த ப்ளான் அப்படி..! பவானியில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அப்படியே கொஞ்சம் தெற்காகப் போய், தே.நெ.47-ஐக் கைப்பற்றி கோவை பாதையில் சென்று சித்தோட்டில் முற்றிலுமாக மேற்காகத் திரும்பி, கவுந்தப்பாடி தாண்டி, கோபியைக் கடந்து, குன்னத்தூர் வழியாக சத்திக்குள் நுழைந்து, தொலைத்து, கோயமுத்தூரில் இருந்து தாளவாடி, சாம்ராஜ்நகர், மைசூர் செல்லும் சாலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று, திரும்பும் வழியில், சத்தி, கள்ளிப்பட்டி, அத்தாணி, அந்தியூர் ரூட்டில் மீண்டும் பவானியை அடைவது! அங்கங்கே கொஞ்சம் எலி கறண்டிய ஒரு முழு

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)