Skip to main content

Posts

Showing posts from January, 2008

மணிக்கூண்டும், மணி கவிதையும்

கோவை போன போது எடுத்த ஒரு புகைப்படம் கோர்வையாக ஒரு கவிதையும் நினைவுக்கு வந்ததது. அலட்டிக்கொள்ளும் ஆளும்கட்சியாய் "சின்னமுள்" துரத்தினாலும் துவண்டாத எதிர்கட்சியாய் "பெரியமுள்" கூடவே கூத்தடிக்க கூட்டணிக்கட்சியாக "வினாடிமுள்" எப்பொழுதும் போல் அப்பாவி மக்களாய் "எண்கள்"

ஆழியாறு

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வண்ணமிகு இடம் காணும் காட்சி கண்ணுக்கு விருந்து, கற்பனைக்கு ஊற்று, இதயத்திற்கு இதம் தரும். இயற்கைக்கு தான் எத்தனை அழகு இறைவா இறைஞ்சிடு இன்னோரு வாழ்வை இந்த அழகைத்தான் சுவைத்திட உன்னைக்கண்டதும் ஓவியன் என்றால் தூரிகைக்கொண்டு ஓவியம் வரைந்திருப்பான். கவிஞன் என்றால் எழுத்தாணிக்கொண்டு கவிதை எழுதிருப்பான்.