சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம். 1. வங்கு - பொந்து, சந்து 2. கம்மனாட்டி - முட்டாள், மடையன் 3. உருமாளை - தலைப்பாகை 4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது. 5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு) 6. அவுசாரி - விபச்சாரி 7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்...
Comments
ila
santhosh
அடுத்த பதிவு எப்பங்க ??
என்ன ரொம்ப நாளா புது பதிவே இல்ல.. ??
எனக்கு சொந்த ஊரு கொடுமுடி பக்கமுங்க..ஆனா படிச்சது கோவைங்க...
நம்மூரு போட்டோ எல்லாம் பாக்குறதுக்கு அவ்வளவு நல்லா இருக்குது கண்ணு. நல்ல வேலை பண்ணுன போ. நீ மகராசனா இருக்கோணும்./
நன்றிங்க
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa....
Vanakkam. _/\_
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa..../
konguvaasal@gmail.com என்னும் முகவரிக்கு ஒரு மடல்
அனுப்புங்கள்
இது எந்த ஊருங்க? (கோவில்பாளையமா)/
கோவில்பாளையமே தான்
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com