சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும். அப்ப சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாதா, பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்ககூட உண்டு. சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், ... இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதோ ஒண்ணு அங்க இருந்துச்சு. இப்பவும் ந்டக்குது, ஆனா அத்தனை கூட்டத்தைக் காணோம். பிறகு மக்கள் போனஸ் வாங்கும் சமயம் கையில காசு புரள்றதைத் தெரிஞ்ச சில சுறுசுறுப்பானவங்க 'வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி' அப்படிங்கற மாதிரி ஒண்ணை வ.உ.சி. பார்க் மைதானத்தில் நடத்த ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பசையுள்ள பார்ட்டிகள் மட்டுமே வருவதாலோ என்னமோ கூட்டம் கம்மியா இருக்கும். புதுசு புதுசா மார்க்கெட்ல என்ன பொருள் வந்துருக்குதுங்கறதத் தெரிஞ்சுக்க மக்களுக்க...
Comments
ila
santhosh
அடுத்த பதிவு எப்பங்க ??
என்ன ரொம்ப நாளா புது பதிவே இல்ல.. ??
எனக்கு சொந்த ஊரு கொடுமுடி பக்கமுங்க..ஆனா படிச்சது கோவைங்க...
நம்மூரு போட்டோ எல்லாம் பாக்குறதுக்கு அவ்வளவு நல்லா இருக்குது கண்ணு. நல்ல வேலை பண்ணுன போ. நீ மகராசனா இருக்கோணும்./
நன்றிங்க
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa....
Vanakkam. _/\_
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa..../
konguvaasal@gmail.com என்னும் முகவரிக்கு ஒரு மடல்
அனுப்புங்கள்
இது எந்த ஊருங்க? (கோவில்பாளையமா)/
கோவில்பாளையமே தான்
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com