உடல வருத்தி வேலை செய்யறவங்களுக்கு உடற்பயிற்சி எல்லாம் தேவை இல்லீங்க. கோயமுத்தூர்ல பணக்காரங்க அதிகமா இருக்கிற இடம் ரேஸ் கோர்ஸ். இங்கே இருக்கிறவங்க கண்டிப்பா உடல் பயிற்சி பண்ணித்தானே ஆவனும். அப்புறம் என்ன? சும்மாங்காச்சும் ஒரு டவுசரை போட்டுகிட்டு, ஷீ ஒன்ன மாட்டிகிட்டு, காதுக்குள்ள பாட்டு கேக்குற பொட்டிய சேர்த்துக்கிட்டு வசதியா ஓடுவாங்க. வேர்க்க விறுவிறுக்க ஓடுவீங்கன்னு நினைப்பீங்க, ஆனா அதுதான் இல்லே, சும்மா நாலு எட்டு வெச்சுட்டு, யாராவது தெரிஞ்சவங்க வந்தா அமைதியா பேசிட்டே நடப்பாங்க. அப்படியே KGக்கு பக்கத்துல இருக்கிற கெளரி சங்கர்ல ஒரு காபி குடிச்சுட்டு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருவாங்க.
இப்போ நாங்க சொன்னதுக்கும், கீழே இருக்கிற படங்களுக்கும் சம்பந்தமேயில்லே. கீழே இருக்கிற படங்கள் எல்லாம் கோவை ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சுத்தி கட்டப்பட்டு இருக்கும் உலக புகழ் வாய்ந்த மினி சைஸ் கட்டடங்கள், சும்மா உங்க பார்வைக்கு.
இப்போ நாங்க சொன்னதுக்கும், கீழே இருக்கிற படங்களுக்கும் சம்பந்தமேயில்லே. கீழே இருக்கிற படங்கள் எல்லாம் கோவை ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சுத்தி கட்டப்பட்டு இருக்கும் உலக புகழ் வாய்ந்த மினி சைஸ் கட்டடங்கள், சும்மா உங்க பார்வைக்கு.
Source: Binarywaves
Comments
வேற யாதுச்சும் கட்டங்க காட்டுங்க... :)
எங்கேன்னுதான் நினைவில்லை.
ஒருவேளை கோயமுத்தூரோ?:-)
விவ்ஸ், உம்ம தளத்துக்கு ஒரு ஓரமா விளம்பரம் தரலாமே. ஏன் இப்படி படத்துக்கு நடுவா?
//யூரோப்லே மினிக்கட்டிடங்கள் இருக்கு//
ஜி.ரா அங்கேதானே இருக்காரு. பார்த்துட்டாரான்னு கேட்டு பார்க்கனும்
//விவ்ஸ், உம்ம தளத்துக்கு ஒரு ஓரமா விளம்பரம் தரலாமே. ஏன் இப்படி படத்துக்கு நடுவா?//
இது என்னோட ஆங்கில பதிவுல இருந்த படங்கள், ஒரிஜினல் படங்களை போடலாம்னா எங்கே இருக்குன்னே தெரியல,. அதான் அங்கே இருந்து இந்தப் படங்களுக்கு லின்க் குடுத்து இருக்கேன்.
ரொம்ப பெரிய கட்டடம் எல்லாம் இல்லீங்க தாணு. ரேஸ் கோர்ஸ் பூங்காவை சுத்தி 2-7 அடி உயரம்தான் இருக்கும். KG complexல (ராகம்-தானம்-பல்லவி-அனு பல்லவி) இருந்து வெளியே வரும்போது சோத்தாங்கை பக்கமா வந்தாவே அந்த வட்டமான பூங்கா வந்துருங்க. பார்த்துட்டு வந்து சொல்லுங்க.