அ க்டோபர் 7, 2K8-ல் எழுதியது. *** * பு தன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன். * லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன். ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ...
நம்மூர்ல மழைங்களா?