1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன்
( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு )
2.கருமன் - பன்றி
3.சொண்டி - இடது கை பழக்கமுடையன்
4.மொறையுது - சத்தமிடுதல்
( வயிரு மொறையுது )
5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு
6.கரடு - குன்று
7.கரிசம் - அன்பு, சிரத்தை
(கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது)
8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி
9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ......
10.குடுமி - தலையுச்சி, கொண்டை
( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் )
11.கூடக்கூட - உடனுக்குடன்
( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு )
12.கும்பி - வயிறு
13.கெடுவு - முறை,தவணை
( எத்தன கெடுவு கொடுக்கறது )
14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல்
( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்)
( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் )
( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)
Comments
Good collection of words.. when I read this, I could recall my childhood.. Felt happy when I see the language which i am using.. Chennai life made me forget some of those... I always want to be with that nativity...
Thanks for this posting and made me remember all my colorful memories..
எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
'நரிக்கு இடம் கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்' பழமொழியில் கிடை என்பது ஆட்டுக் கூட்டத்தையே குறிக்கும் என நினைக்கிறேன் நண்பா.
எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்/
நன்றி நண்பரே
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல
இந்தப் பழமொழியில் கிடை என்பது கூட்டம் எனப் பொருள் படும்.
ஆனால் கீழ்க்கண்ட பழமொழியில் பாருங்கள்
நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம்
இங்கே கிடை என்பதற்கு கூட்டம் என்பதை விட நேரம் என்று பொருள் கொள்வதே நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .
இன்னும் கிடை என்பதற்கு எத்தனையே பொருள் உண்டு
கிடை _ நெட்டி : கிடக்கை : நோயில் விழுகை : இருப்பிடம் : வேத பாடசாலை : வேதம் ஓதும் குழாம் : ஆயுதம் : பயிலிடம் : ஆட்டுக் கிடை : உட் கிடை : ஐயம் : உவமை : சடை மரம் .
கிடைக்காரன் _ ஆட்டுக் கிடைக்கு உரியவன்.
கிடைச் சரக்கு _ நாட் பட்ட சரக்கு.
கிடைத்தல் _ அடைதல் : பெறுதல் : இயைதல் : அணுகல் : எதிர்த்தல்.
கிடைப்பாடு _ நோய்.
கிடை வைத்தல் _ உரத்திற்காக கால்நடைகளை வயலிற் கட்டுதல்.
(என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே
போகலாமா?)
இப்படி
இருந்தும்
சரிபார்த்துக் கொள்கின்றேன் நண்பரே
என்னோட ப்ளாக் ல உங்க அனுமதி இல்லாமையே இதை பத்தி போட்டுட்டு இதுக்கான லிங்க் கொடுத்துட்டேன்.. நம்ம ஆளுங்களுக்கு உதவலாம்னு தான். தப்ப எடுத்துக்க மாட்டேங்க்களே ??
http://sakthitalks.blogspot.com/2010/03/blog-post_10.html
அறியவேண்டியது:
"அவர்கள் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனார்கள்"
இந்த வாக்கியத்தை சிவகாசி/விருதுநகர், தஞ்சாவூர், கோவை (கோயம்புத்தூர்), வேலூர் போன்ற இடங்களிலுள்ள வட்டார வழக்குகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி. எனது மின்னஞ்சல் rbgrubh@hotmail.com