Skip to main content

இன்றைய செய்திகள்: - அக் 31, 2007

  1. கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும்
  2. உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
  3. பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
  4. கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது.
  5. சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

Comments

தமிழன்பனும், வரதராஜனும் சேர்ந்து செய்தி வாசிச்சா மாதிரி இருக்குங்க.
Kasi Arumugam said…
:-)

அல்லாம் உங்களை மாதிரி அசலூர் போனவுங்களுக்காகதான், இளா.
கோவை டு சிங்கை.

நல்ல 'சேவை'.


ஆமாம்.தூத்துக்குடிக்கு விமானநிலையம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களெ. எப்பவாம்?
காசி,

நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.
//காசி,

நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது.//


நல்வரவு காசி
Anonymous said…
கோவை ‍ சிங்கை விமான சேவை எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப வசதி. இவ்வளவு நாள் சென்னை போய்தான் கோவை போயிட்டு இருந்தோம். காலைல கெளம்பினா ராத்திரி கோவை போயிறலாம்.
Kasi Arumugam said…
//தூத்துக்குடிக்கு விமானநிலையம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களெ. எப்பவாம்?//

தெரியலீங்கக்கா, தூத்துக்குடிக்காரவுங்க யாராச்சும் பதில் சொல்வாங்களா பாப்பம்.

செல்வநாயகி, சுரதா,
எனக்கும் சந்தோசம்தான். உங்கள் வரவேற்புக்கு நன்றி.

சின்னம்ணி, முக்கியமா பெட்டியெல்லாம் கொண்டுபோய் மாத்துற வேலை இருக்காது. இடையில் காத்திருக்கிற வேலை இல்லை.
Anonymous said…
//சின்னம்ணி, முக்கியமா பெட்டியெல்லாம் கொண்டுபோய் மாத்துற வேலை இருக்காது. இடையில் காத்திருக்கிற வேலை இல்லை//

முக்கியமா, நைட்டு 11 மணிக்கு சென்னைல இறங்கி மறுநாள் மத்தியானம் கோவை வர்ர பேஜாரு இனிமே இருக்காது. ஒரு நாள் மிச்சம் பண்ணலாம்.

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

எக்சிபிசன்ல வாங்குனதா?

சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும். அப்ப சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாதா, பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்ககூட உண்டு. சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், ... இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதோ ஒண்ணு அங்க இருந்துச்சு. இப்பவும் ந்டக்குது, ஆனா அத்தனை கூட்டத்தைக் காணோம். பிறகு மக்கள் போனஸ் வாங்கும் சமயம் கையில காசு புரள்றதைத் தெரிஞ்ச சில சுறுசுறுப்பானவங்க 'வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி' அப்படிங்கற மாதிரி ஒண்ணை வ.உ.சி. பார்க் மைதானத்தில் நடத்த ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பசையுள்ள பார்ட்டிகள் மட்டுமே வருவதாலோ என்னமோ கூட்டம் கம்மியா இருக்கும். புதுசு புதுசா மார்க்கெட்ல என்ன பொருள் வந்துருக்குதுங்கறதத் தெரிஞ்சுக்க மக்களுக்க...