- கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும்
- உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
- பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
- கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது.
- சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...
Comments
அல்லாம் உங்களை மாதிரி அசலூர் போனவுங்களுக்காகதான், இளா.
நல்ல 'சேவை'.
ஆமாம்.தூத்துக்குடிக்கு விமானநிலையம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களெ. எப்பவாம்?
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது.//
நல்வரவு காசி
தெரியலீங்கக்கா, தூத்துக்குடிக்காரவுங்க யாராச்சும் பதில் சொல்வாங்களா பாப்பம்.
செல்வநாயகி, சுரதா,
எனக்கும் சந்தோசம்தான். உங்கள் வரவேற்புக்கு நன்றி.
சின்னம்ணி, முக்கியமா பெட்டியெல்லாம் கொண்டுபோய் மாத்துற வேலை இருக்காது. இடையில் காத்திருக்கிற வேலை இல்லை.
முக்கியமா, நைட்டு 11 மணிக்கு சென்னைல இறங்கி மறுநாள் மத்தியானம் கோவை வர்ர பேஜாரு இனிமே இருக்காது. ஒரு நாள் மிச்சம் பண்ணலாம்.