Skip to main content

தெரியுமுங்களா-2

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நடிகருங்க பத்தின கேள்வி பதில் தானுங்க. இன்னிக்கு சத்யராஜ் பத்தின கேள்விங்க மட்டும்.


1) சத்யராஜோட இயற்பெயர் என்னான்னு தெரியுங்களா?
2) கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க?
3) அவரு படிச்ச கல்லூரி?
4) மொதோ படம் எதுங்க?
5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க?
6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?

Comments

Anonymous said…
1.ரங்கராஜ்.
3.கோவை அரசுக்கல்லூரி
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை
5. சாவி
6.பெரியார்
1. சத்தியமா சத்யராஜ் அல்ல
2. அவினாசி அல்ல (பாப்பநாயக்கம்பாளையம்- னு ஜப்பானில் கல்யாணராமன்ல சொல்லுவாரு)
3. அரசு வேளாண் கல்லூரி
4. முதல் மரியாதை
5. கடலோரக் கவிதைகள்
6. பெரியார்தான்
ஒரு கேள்விக்கு சரியான பதில் தந்த சிபிக்கு வாழ்த்துக்கள்!
நிலா said…
1. ரங்கராஜ்
2. (டக்குன்னு வரமாட்டேங்குது)

5.சாவி

6. பெரியார்.
Icarus;
All correct except the first film.(let me get it correct it myself, if you are right)
Nila
Well done, all 3 correct.
நிலா said…
4. சட்டம் என் கையில்?
இல்லீங்க நிலா
2)கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க?
ஊத்துக்குளி
3) அவரு படிச்ச கல்லூரி?
கோவை அரசு கலைக் கல்லூ
4) மொதோ படம் எதுங்க?
ஞூற்றுக்கு நூறு (மொட்டைத்தலையுடன் வில்லனாக வருவார்)
5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க?
கடலோரக் கவிதைகள்
6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?

தந்தை பெரியார் வேடம்
Anonymous said…
) சத்யராஜோட இயற்பெயர் என்னான்னு தெரியுங்களா?
ரங்கராஜ்

2) கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க?
ஜமீன் ஊத்துகுளி

3) அவரு படிச்ச கல்லூரி?
கோவை அரசினர் கல்லூரி

4) மொதோ படம் எதுங்க?
கோடுகள் இல்லாத கோலங்கள்.

5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு

6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?
எம்.ஜி.யார்

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் க

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் ப