Skip to main content

கொங்கு வட்டார வழக்கு: ஐந்தாம் பாகம்1.அந்தப்பொறம் - அந்தப்பக்கம்

2.அந்தான்டே - அந்தப்பக்கம்

3.அள்ளையில் - பக்கத்தில்

4.இன்னிக்கு - இன்றைக்கு

5.உச்சாணி - உச்சி

6.உம்மை - உண்மை

7.ஓசனை - யோசனை

8.ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல்

9.கண்ணாலம் - திருமணம்

10.கமுத்தி - கவிழ்த்தி

11.குக்கு - உட்கார்

12.குறுக்காட்டி - வழி மறித்தல்

13.கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை

14.தொறப்புக்கை - திறவுக்கோல்

15.தோண்டி - குடம்

16.காத்தாலை - விடியற் காலை

17.கிச்சு - அக்குள்

18.சாங்கியம் - சடங்கு

19.செலவாந்தரம் - பழமொழி

20.தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன்

21.தடுக்கு - ஒலையில் செய்த கீற்று

22.பம்பாதே - பதுங்காதே

23.பிப்பு - அரிப்பு எடுத்தல்

24.முச்சி - முறம்

25.மசையன் - விவரமற்றவன்

26.மப்பு - போதை, மங்கல்

27.வக்கு - வசதி

28.வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம்

29.உப்புசம் - புழுக்கம்

30.வளுசல் - சிறுவன்

31.சொள்ளை - கொசு

32.தப்பரது - துணி துவைத்தல்

33.கொமரி - வயசுப் பெண்

34.ஆசாரம் - வீட்டின் மையப்பகுதி ( Hall )

35.மேப்படி - கதவின் மேலுள்ள பகுதி ( loft )

Comments

ஏனுங், பட்டாவெட்டி ங்கற
வார்த்தை எங்க இருந்து வந்ததுங்.
ஏனுங்,, நாமோ பேசறது பல தமிழ் வார்த்தைகளோட திரிபு தானுங்... நீங் செரியா சொல்லுலீங்.... இப்டி கட்டு வார்த்தையா நீங் சொல்றது செரியா தெரிலீங்,,,

நண்பரே கொங்கு... க என்ற உச்சரிப்பு கொங்குதமிழில் ஒரு மறை எழுத்து.. எடுத்துக் காட்டாக ... சொல்லுங்கள் என்று சொல்லாமல் .. சொல்லுங்ங்... என்று நாம் சொல்லுவோம்..இருந்தாலும் நான் இப்படி கட்டு வார்த்தையா பேசறது உங்களுக்கு கோவம் இல்லையே..
கண்ணுகளா, அல்லாரும் நல்லா இருக்கீங்ளா? நல்ல வேல பண்ணுறீங் கண்ணுகளா....நான் மறுக்கா வாரேன்!
ஈடு
சித்தங்கூரம்
கோம்பக்காடு
மொகுடு
சாலாணி
திரவக்கொடி

நான் அப்பப்ப நாவகம் வரும்போது வந்து திண்ணையில குறிச்சி வெச்சுட்டுப் போறன் செரியா?
தீரன் said…
ஏனுங் இந்த வார்த்தையெல்லாம் பாக்க நெம்ப சந்தோசமா இருக்கு...
நல்ல தெகிரியம் தான் உங்களுக்கு....
பட்டய கிளப்புங்க......
உழுத்துறது
பரும்படியா
திலிம்பி
சேந்துறது
தமிழ் said…
நன்றி நண்பர்களே
Prem said…
Super...
Romba nallaa irunththuthu intha thokuppu... Nammooru vattaara vaLakka ippadith theLiva sonnathukkum, namma oor kaadukala niraiva pOtathukkum nandri!
Anbudan,
Prem.

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் க

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் ப