1.அவியொ - அவர்கள் 2.உங்குனாலே - உங்களாலே 3.அட்டி - கழுத்தில் அணியும் அணி 4.அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு 5.அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை 6.அதிக்களம் - ஆணவம் 7.அல்லை - இடுப்பு 8.எரப்பாணி - இரந்து உண்ணுபவன் 9.எருக்காலி - பயந்து நடுங்குவன் 10.ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம் 11.ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம் 12.ஒடை அடித்தல் - காயடித்தல் 13.ஒவை - மரக்கிளையை அசைத்தல் 14.ஓடை - மேட்டு நிலம் 15.ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி 16.கடக்கால் - அடித்தளம் 17.கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம் 18.கோயல் - கோவில் 19.கச்சல் - குழப்பம், நைந்து விடுதல் 20.கடையாணி - அச்சாணி 21.கந்தர கோலம் - அலங்கோலம் 22.கருமாந்திரம் - திட்டும் சொல் 23.கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி 24.குக்கல் - நாய் 25.காந்து - வெயிலின் மிகு வெப்பம் 26.கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு ...
நம்மூர்ல மழைங்களா?