( செல்வன் அவர்கள் எழுதிய இடுகையை இங்கே அவரின் அனுமதியுடன் இட்டுள்ளேன்.பழைய நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுகம் தான்.) ***************************************************************************** கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம்...
நம்மூர்ல மழைங்களா?