Skip to main content

பதில் சொல்ல முடியுமா?-1

அட என்னங்க. நாங்களே எங்க ஊரை பத்தி சொல்லிட்டு இருந்தா, இதெல்லலாம்தான் எங்களுக்குத் தெரியும்னு எங்க ஊர் மக்கள் மாதிரியே குசும்பு பண்றீங்க. அதனாலதான் எங்க ஊரைப்பத்தி நீங்க என்ன தெரிஞ்சு வெச்சு இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கிறதுக்காக இந்த கேள்விகள்

1. கொங்கு மண்டலத்துல பொறந்து வளர்ந்த அந்த பெரிய விஞ்ஞானி யாரு?

2. கோவைக்கு பக்கத்துல இருக்கிற பிரசித்த பெற்ற முருகக்கடவுள் கோயில் எது?

3. கோவையில படிச்சு இன்னைக்கு மென்பொருள் துறையில முதல் 10 இடத்துக்குள்ளே இருக்கும் அந்த தொழிலதிபர் யாரு? அவர் நடத்தும் நிறுவனத்தின் பெயர் என்ன?

4. PSG கலைக்கல்லூரியில் வேதியியல் படிச்சு தங்கப்பதக்கம் வாங்கின நடிகர் யாரு?

5. PSG கலைக்கல்லூரியில் படிச்சு நடிகராகி இருக்கிற இவர் ஒரு பெரிய அரசியல்வாதியின் பேரன். யார் இவர்?

Comments

Anonymous said…
1)ஜீ.டி.நாயுடு
2)மல..மல..மருதமல
3)டி.சி.எஸ்.ராமதுரை??
4)நிழல்கள் ரவி??
5)நந்தா.
1)ஜீ.டி.நாயுடு
2)மல..மல..மருதமல
3)டி.சி.எஸ்.ராமதுரை??
4)நிழல்கள் ரவி??
5)நந்தா.
CAP?)
3 & 4 தவறுங்க மக்களே
ALIF AHAMED said…
4.மின்னல்
ALIF AHAMED said…
1)ஜீ.டி.நாயுடு
2)மருதமலை
3)ராமசந்திரமூர்த்தி
4)இளமுருகு
5)நந்தா.
மின்னலு 3 & 4 சரியா இல்லே.
இளமுருகு- தங்கப்பதக்கமா? காலேஜ்ல பாஸ் பண்ணினது பெரிய விஷயம்னு எங்க HOD சொல்றாரு.. நீங்க வேற
Anonymous said…
1. ஜீ.டி.நாயுடு
2. மருதமலை
4.ரகுவரன்
5.சத்யராஜ்
4 & 5-தப்புங்க அம்மணி.
Anonymous said…
வேற எதாச்சும் க்ளூ குடுங்க.
4. ஒரு நடிகர் மட்டும் இல்லீங்க ஒரு இயக்குனரும் கூட

5.க்கு ஏற்கனவே சில பேர் பதில் சரியா சொல்லிட்டாங்க. ஆனா யாரோட பேரன்னு யாரும் சொல்லலை.

3. சினிமா பத்தி எல்லாம் கேட்டா சீக்கிரம் சொல்லிடறாங்க. வேலை பார்க்கிற தொழில்ல ஒரு பெரிய ஆளைக் கேட்டா சொல்ல மாட்டேங்குறாங்க :(
Anonymous said…
4. பாக்யராஜ்???
5. கண்ணப்பன் - நந்தா ??
Anonymous said…
4. மணிவண்ணன்
Anonymous said…
4. மணிவண்ணன்
5. நந்தா -கண்ணப்பன்
Anonymous said…
ஊரை விட்டு வந்து எட்டரை வருசமாச்சு. எல்லாத்தையும் சரியா ஞாபகத்தில வச்சுக்காம விட்டுட்டேன்.
உங்க புண்ணியத்துல திரும்பவும் ரெஃரெஷ் பண்ணிக்கறேன்
3. சிவ நாடார் - HCL
அசத்திட்டீங்க செல்லமுத்து..
3. Shiv Nadar, Chairman of HCL Technologies. Did his BE Electrical Engg in PSG Tech.
Vaa.Manikandan said…
எல்லாம் சரியா சொல்லிட்டாங்களா? ஓகே....நெக்ஸ்ட்..ஸ்டார்ட் மியூஜிக் :)

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் க

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் ப