Skip to main content

ஆடி நோம்பி....

தீபாவளி,பொங்கலுக்கு அடுத்து ஆவலோட எதிர்பார்த்திட்டு இருக்கிற நோம்பி இந்த ஆடி நோம்பி தான்.காவிரி சூலூர் பக்கம் பாயலைங்கறதுக்காக ஆடி நோம்பியைக் கொண்டாடாம இருக்க முடியுமா??மே மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பின்னாடி வர்ர மொத லீவு இந்த ஆடி நோம்பிக்குத்தான்.இது தான் முக்கிய காரணமின்னாலும் தூரியாடறது,பட்டம் உடுறது,தேங்காயை வாட்டி சாப்பிடறதுன்னு இந்த நோம்பியை எதிர்பார்த்திட்டு இருக்க இன்னும் பல காரணங்கள் இருக்கு.

ஆடி 18 என்ன கெழமை வருதுன்னு அப்பா ஒரு மாசம் முன்னாடி பார்த்து சொல்லுவாரு.எங்க அத்தை ஊட்டுக்குப் போறதா இல்லை அவங்க இங்க வருவாங்களான்னு ஒரு பத்து நாளைக்கு வீட்டில பெரியவங்க டிஸ்கஷன் பண்ணுவாங்க.முடிவென்னமோ எப்பயும் போல அவங்க இங்க வருவாங்கன்னு தான் எடுப்பாங்க.அப்புறம் வழக்கம் போல எங்க அத்தை,மாமாவை நோம்பிக்குக் கூப்பிட எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வருவாரு.

அம்மியே பறக்கர மாதிரி அடிக்கற ஆடிக்காத்தில தூரி கட்டி ஆடாட்டி அப்புறம் அந்தக் காத்துக்கு என்ன மருவாதை?நோம்பிக்கு முன்னாடியே, வெள்ளிக்கெழமை சந்தையில போயி தண்ணி சேர்ந்திற கயிறு வாங்கிட்டு வந்து வச்சிருப்பாரு.எனக்கு ஒண்ணு,ஒடம்பொறப்புக்கு ஒண்ணு,ஒரம்பொறைக்கு ஒண்ணுன்னு மொத்தம் மூணு தூரி.முரட்டுக் கயிறு குத்தாம இருக்கக் கதர்கடையில வாங்கின பச்சைப் போர்வையை மடிச்சு அம்மா வைப்பாங்க.யார் வீட்டில என்ன பலகாரம்,யார் எங்கே போராங்க,யார் வீட்டுக்கு யார் வாராங்க,எப்போ பட்டம் உடற போட்டியை வச்சுக்கிறதுன்னு நோம்பிக்கு முன்னத்த நாள் முழுக்க, வகுப்பில இது தான் பேச்சாயிருக்கும்.சாய்ங்காலம் வீட்டுக்க வந்த உடனே யூனிபார்மைக் கூடக் கழட்டாம அம்மா சுட்ட முறுக்கை சாப்பிட்டுட்டே ஒரு பத்து வாட்டியாவது தூரியாடணும்.கொஞ்ச நேரத்துல அத்தை,மாம்ஸ்,மச்சான் வருவாங்க.அத்தை கொண்டு வந்த உப்பட்டில ஒரு மூணைப் பழத்தோட சேர்ந்து அடிச்ச பின்னாடி ராத்திரிக்கு சோறு எறங்குமா?

நோம்பியன்னைக்குக் கார்த்தலை எல்லாரும் குளிச்சுட்டு செட்டா உள்ளூர்ல இருக்கிற சிவன் கோவிலுக்குப் போயிட்டு வருவோம்.சூலூர் குளத்தில மஞ்சள்,வெத்தலையெல்லாம் வச்சு பூசை பண்ணுவாங்க.கோயில் பக்கத்தில இருக்கிற மயிலண்ணன் கடையில பலூன்,பீப்பீ,கலர் கண்ணாடி எல்லாம் மாம்ஸ் புண்ணியத்தில நம்ம கைக்கு வந்துடும்.மச்சான் பட்டம் உடறதுல கில்லாடி.கோயில்ல இருந்து வந்த உடனே பட்டம் கட்ட ஆரம்பிப்போம்.கட்டி முடிச்ச உடனே பட்டம் உட பீரங்கி மேட்டுக்குப் போயிடுவோம்.சலிக்கிறவரைக்கும் பட்டம் உட்டுட்டு வீடு திரும்பும் போது தான் தெரியும் மத்தியானம் சாப்படவே இல்லைன்னு.வந்து சாப்பட்டை ஒரு கட்டு கட்டீட்டு மறுபடியும் தூரி தான்.எதாச்சி நல்ல படம் சண்முகதேவியில வந்திருந்தா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு வருவோம்...

அட..அட..அட..என்ன வாழ்க்கை அது...

ரைட்டுண்ணேன்...

இந்த வருஷம்,ஆகஸ்ட் மூணாந்தேதி ஆடி நோம்பி வருதாம்.ஆடிப்பட்டம் தேடிப் பயிரிட்ட விவசாயத்தோழர்களுக்கும்,தலை ஆடிக்கு மாமனார் வூட்டுக்குப் போர அண்ணன் மார்களுக்கும்,தூரி கட்டிக்கொடுக்கும் அப்பாமார்களுக்கும்,முறுக்கு,உப்பட்டு செஞ்சு கொடுக்கிற அம்மாமார்களுக்கும் எங்களோட ஆடி நோம்பி வாழ்த்துகள்...

Comments

போன வருஷம் விவசாயி கொண்டாடின ஆடி நோன்பி பாருங்க
Sud Gopal said…
அட கச்சாயத்தை உட்டுட்டியேடா கூறு கெட்ட குப்பான்னு அம்மா சத்தம் போடுது.

கச்சாயம் இல்லாத கொங்கு நாட்டு நோம்பியா??நெனச்சுக்கூட பார்க்க முடியாது சாமியோவ்...
Anonymous said…
கச்சாயமும் ஒப்பிட்டும் பார்சல் பண்ணி அனுப்புங்கோ சீக்கிரம். சாப்பிட ஆசையா இருக்கு.
(உக்கடம் வாலாங்குளம் போட்டோ சுப்பருங்கோ)
மங்கை said…
நீங்க கோவைன்னு எனக்கு இவ்வளவு நாளா தெரியாம போச்சே..அத்தன அழகா கவனம் செலுத்தி இருக்கேன்
மன்னிச்சுடுங்கோவ்...

ஹ்ம்ம்ம் இது எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்...ஆடி வெள்ளி, காதைக் கிழிக்கும் ரெக்கார்ட்டு சத்தம்.. ஆடி வெள்ளி அன்று குதூகலத்துடனும், பரபரப்புடனும் சுத்தி வரும் பெண்கள், இது போல விசேஷங்களில் ரங்கைகவுண்டர் வீதி பரபரப்பு, பூ மார்க்கெட் கூட்டம்....ஹ்ம்ம்ம்

நன்றி, நினைவுகளையாவது அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தற்கு

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...

பீளமேடு - பழைய நினைவுகள் ( மீள்ப‌திவு )

( செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய இடுகையை இங்கே அவ‌ரின் அனும‌தியுட‌ன் இட்டுள்ளேன்.ப‌ழைய‌ நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுக‌ம் தான்.) ***************************************************************************** கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம்...