Skip to main content

எக்சிபிசன்ல வாங்குனதா?

சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும். அப்ப சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாதா, பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்ககூட உண்டு. சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், ... இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதோ ஒண்ணு அங்க இருந்துச்சு. இப்பவும் ந்டக்குது, ஆனா அத்தனை கூட்டத்தைக் காணோம்.

பிறகு மக்கள் போனஸ் வாங்கும் சமயம் கையில காசு புரள்றதைத் தெரிஞ்ச சில சுறுசுறுப்பானவங்க 'வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி' அப்படிங்கற மாதிரி ஒண்ணை வ.உ.சி. பார்க் மைதானத்தில் நடத்த ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பசையுள்ள பார்ட்டிகள் மட்டுமே வருவதாலோ என்னமோ கூட்டம் கம்மியா இருக்கும். புதுசு புதுசா மார்க்கெட்ல என்ன பொருள் வந்துருக்குதுங்கறதத் தெரிஞ்சுக்க மக்களுக்கு இயற்கையிலயே ஆர்வம் இருந்ததனால இந்த வகைப் பொருட்காட்சிகள் கொஞ்சங்கொஞ்சமா பிரபலமாகி இப்ப பொருட்காட்சி இல்லாத வாரமே இல்லைங்கிற மாதிரி ஆகிப் போச்சு!

அதுலயும் இப்ப தீபாளி சீசனாச்சா, ஒரே வாரத்தில் ரெண்டு கண்காட்சி/பொருட்காட்சியுங்கூட நடக்குது. பெரும்பாலும் வெள்ளி/சனி/நாயிறு மூணுநாள் நடக்கும். இப்பல்லாம் சுகுணா, ராமகிருஷ்ணா கல்யாண மண்டபங்க, பத்மாவதி அம்மா கல்சுரல் சென்டர் இங்கெல்லாம்தான் இந்த கண்காட்சி நடக்குது. கொடிசியா சிறுதொழில் சங்கம் கட்டியிருக்கிற பொருட்காட்சி வளாகத்திலயும் சில பெரிய கண்காட்சிகள் நடக்குது. அப்பவும் கூட்டம் அலைமோதுது. போன மாசம் அப்படித்தான் தினமலர் பேப்பர்காரங்க கொடீசியா அரங்குல நடத்துன கண்காட்சிக்கு 5 மணிக்கே உள்ளே போகவிடாம போலீஸ் தடுக்கவேண்டிய அளவுக்கு கூட்டம்!

போன வாரமமும் ஒண்ணு கொடீசியாவில் நடந்தது, ஆனா அதுக்கு அத்தனை வரவேற்பைக் காணோம். 12 நாள்னு சொன்னப்பவே 'என்னடா'ன்னு இருந்துச்சு. ஆரம்பத்துல 30 ரூபா டிக்கட்டெல்லாம் போட்டாங்க, அப்புறம் கூட்டம் வராம, 'அனுமதி இலவசம்'னாங்க. ஒரு சின்ன ஸ்டாலுக்கு 30 ஆயிரம் 40 ஆயிரம் கேட்டாங்க, பிறகு 10 ஆயிரத்துக்கு கிடைக்கும்னாங்க. கடைசியில் கடை கடையா வந்து இலவச அழைப்பிதழைக் கொடுத்து 'வாங்க'ன்னாங்க. நான் போகலைங்க. எங்க நண்பர் போய்ப் பாத்துட்டு ஒண்ணும் செரியில்லைன்னுட்டாரு. இப்ப என்னடான்னா இன்னும் 4 நாளைக்கு நீட்டிச்சிருக்காங்களாம். பாவம்!

ஒரு பொருள் சரியா வேலை செய்யாட்டி'எக்சிபிசன்ல வாங்குனதா?'னு கேட்டது ஒரு காலம். இப்ப 'எச்சிபிசன்ல வாங்கினா கூடக்கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்கும்னு மக்கள் விவரமா ஆகிட்டாங்க! ஒண்ணும் வாங்காட்டியும் பெரிய 'மால்' இல்லாத குறைக்காகவாவது மக்கள் வருவதால, எக்சிபிசன் இன்னும் கோவையில் நல்லா போகும்போலத்தான் தெரியுதுங்கோ:-)

Comments

மங்கை said…
கைத்தரி கண்காட்சிக்காக காத்துட்டு இருந்து அந்த சமயத்துல ஜமக்காளம், பெட்ஷீட் வாங்குன காலமும் உண்டு.. இந்த என்சிபிசன காணாத கண்ணும் ஒரு கண்ணானு கேட்ட காலமும் உண்டு
ஹ்ம்ம்..அதுக்காக ஒரு ப்ளான் எல்லாம் போட்டு..ஹ்ம்ம்

நீங்க சொன்ன பெரிய மால் கெல்லாம் இன்ங்க போனா கூட அப்ப அந்த வா உ சி பூங்கா/ ஜெயில் க்ரவுண்ட்ல நண்பிகளுடன் சுத்தின சந்தோஷம் இல்லை..ம்ம்ம்

கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க..
ilavanji said…
ஆஹா!

காசியண்ணே, எத்தனை நாளாச்சு உங்க பதிவினை பார்த்து? அடுத்த இன்னிங்ஸ்ல பட்டய கெளப்ப வாழ்த்துக்கள்!

வட்டத்துக்குள்ள வட்டம் வைச்சு அதுல பேனா வைச்சு சுத்தி விதவிதமா பூ வரைவாங்களே! அது சூப்பரா இருக்கும். காதைப்பொளக்கும் விளம்பரங்க நிக்கான ஓடும். அப்ப வந்த படவெளம்பரம்.. "சின்ன பசங்க நாங்க.. எங்கள பார்க்க வாங்க!" :)


// சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம் // அங்கனயே மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் மெல்டிங்மேன் அப்படின்னு ஒரு ஸ்டால் இருக்கும் பார்த்திருக்கீங்களா? மனுசன் எலும்புக்கூடாகி அப்பறம் திரும்ப மனுசனா மாற்றது! அதில் மனுசனாக நடித்த அனுபவம் அடியேனுக்கு உண்டு. (எங்க மக்கா, எலும்புக்கூடு மட்டுந்தான் இருந்துச்சு.. மனுசனா மாறவேல்லன்னு நக்கல் பண்ணது இங்க வேணாம்! )
Kasi Arumugam said…
வாழ்த்துக்கு நன்றி, இளவஞ்சி.

பதிவர்களுடைய ஜனநாயகத் தன்மையைப் பார்த்துப் பூரிச்சுப் போய் 'இனி எதுனா சொல்லணும்னா நமக்கும் ஒரு பதிவு இருந்தாத்தான் ஆச்சு'ன்னு முடிவு பண்ணிட்டேன். (இதில் பெரிய பெரிய பட்டறைப் பேச்சாளர்களும் அடக்கம்:P) கூடிய சீக்கிரம் ஒண்ணைத் தொறந்துடுவேன், அல்லது பழயதுக்கு வெள்ளையடிச்சு பால் காச்சிர வேண்டியதுதான்.

//வட்டத்துக்குள்ள வட்டம் வைச்சு அதுல பேனா வைச்சு சுத்தி விதவிதமா பூ வரைவாங்களே! அது சூப்பரா இருக்கும்.//

அட அதுக்குப்பேரு ஸ்பைரோகிராப். (பிறகு தெரிஞ்சிகிட்டது:-))

//அங்கனயே மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் மெல்டிங்மேன் அப்படின்னு ஒரு ஸ்டால் இருக்கும் பார்த்திருக்கீங்களா? //ஆமா, அதை சொல்ல மறந்துட்டனே.
//அதில் மனுசனாக நடித்த அனுபவம் அடியேனுக்கு உண்டு.// அப்ப எதாவது கரண்டு கிரண்டு அடிச்சுத்தான் முடியெல்லாம் உளுந்துருச்சா? :-))

எஸ்கேப்!
மங்கை said…
ஐயோ நான் போட்ட பின்னூட்டம் எங்கீங்க காணோம போயிடுச்சு
Kasi Arumugam said…
(மாமியாருக்கு இரங்கிய) மங்கை, வாங்க. :-)

கொசுவத்தி சுத்தட்டும். சுத்தட்டும்.

(உங்க பின்னூட்டம் காணாமப்போகல. இங்க மட்டுறுத்தல் வசதி உள்ளவங்க பாக்கறதுக்கு கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். சனிக்கிழமை வேறயா, ஆணி புடுங்குறவுங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டாங்க போல;-) (மக்களே அடிக்க வராதீங்க!)
//சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும்//

அப்பவெல்லாம் நம்ம பொழுதுபோக்கு என்னன்னு கேளுங்க!நேரா பக்கத்துல இருக்கிற படிப்பகத்துக்குள்ள போயிட வேண்டியது.பசி எடுத்தா நடையாவே போயி கீதா ஹோட்டலுக்குப் பக்கத்துல பொட்டிக்கடையா இருந்த சுப்பு மெஸ்ல இட்லி தோசை முழுங்க வேண்டியது.அது ஒரு கனாக்காலம்.
வாங்கய்யா. திரும்பி வந்ததிற்கு வாழ்த்துக்கள்.

மங்கை, என்னதான் கைத்தறி கண்காட்சி எல்லாம் இருந்தாலும் நம்ம காந்திபுரத்தில் வாரயிறுதியில் நடக்குமே அந்த சந்தை. அங்க பேரம் பேசி வாங்கும் சுகமேத் தனி. :)
Anonymous said…
டெல்லி அப்பளம் மேல கொஞ்சம் மிளகாய்த்தூள் தூவி குடுப்பாங்க. அதுக்காகவே அடம்பிடிச்சு வீட்டுல கூட்டிட்டு போக சொல்லுவோம். குட்டி குட்டி பொம்மை, விளையாட்டு சாமானம். அப்பறம் ஐஸ் கிரீம். தூரி, ராட்டினம் அடுத்த அட்ராக்ஷன். அப்பறம் க்ராஸ் கட் ரோட்ல 4வது தெருவுலதான் (ஆத்தா)பாட்டி வீடு. அங்க இல்லன்னா கவுரி சங்கர்ல ராத்தி டிபன் சாப்டுவோம். கார்னர்ல நெல்லை லாலா கடைல நொறுக்ஸ் வாங்கிடுவோம். அப்பா, அம்மாவுக்கு நல்ல செலவு தான் அன்னைக்கு. ஆனாலும் அவுட்டிங் போற சந்தோஷம் இருக்கே. அதுக்கு இணை வேற எதுவும் இல்லை.
சென்னையில் சித்திரை பொருட்காட்சி என்று பெயர். எனக்கு இரண்டு தலை சிறுமி, பாம்பு மனிதன் இவை எல்லாம்
பயத்துடன் பிடிக்கும்.
மீண்டு(ம்) வந்த காசிக்கு நல்வரவு. அப்பால கிசுகிசு பாணில போட்டா எப்படி? யாரூ என்னன்னு ஏதாவது ஹிண்ட் கொடுங்க
ஸ்பைராகிராப் மாதிரியே இன்னொண்ணு.

(கெலைய்டாஸ்கோப்பா? பேரு தெரியல)

ஒரு கண் மூடி ஒரு கண்ணில் வைத்து சுற்றி சுற்றிப் பார்த்தால் உள்ளே ஜிகினாமாதிரி சின்ன கண்ணாடித் துண்டுகள் டிசைன் டிசைனா மாறி மாறித்தெரியும்.

இந்த ரெண்டு கிறுக்கும் இன்னும் தெளியல:-)
அப்படியே பஞ்சுமிட்டாயி:-)
தருமி said…
மீண்டும், சீக்கிரம் பால்காய்ச்ச வாழ்த்துக்கள்
ilavanji said…
காசி,

ஸ்பைரோகிராப் சுட்டிக்கு நன்றி!

// அப்ப எதாவது கரண்டு கிரண்டு அடிச்சுத்தான் முடியெல்லாம் உளுந்துருச்சா? //

அண்ணே! அப்பல்லாம் நல்ல சுருள்முடி பங்க்கு ஹேர்ஸ்டைல்ல வடசென்னை அடியாளு மாதிரியே சும்மா சுகுர்ர்ரா இருப்பேன்! கரெண்ட்டெல்லாம் அடிக்கலை. ஆடுட ஆட்டத்துக்கு ஆண்டவன் அவனே கொடுத்தான் அவனே எடுத்தான் கதைதான். :)
ரெடி சப்பாத்தி மஷின்,
கடையில மட்டும் வேலை செய்யற காய்கறி வெட்டற கருவி,
இதெலாம் விட்டுட்டீங்க:))

நல்(மீள்)வரவு காசி அவர்களே.
Kasi Arumugam said…
நட்டு, கொத்தனார், சின்னம்மணி (இப்ப்டித்தானே சொல்லணும்?), உஷா, மதுமிதா, தருமி, வல்லிசிம்ஹன்

வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி.

//அப்பால கிசுகிசு பாணில போட்டா எப்படி? யாரூ என்னன்னு ஏதாவது ஹிண்ட் கொடுங்க//

இது நண்பர்கள் மனமகிழ்மன்றம். இங்கே 'அரசியல் பேசாதீர்'ன்னு ஒரு விர்ச்சுவல் போர்டு தொங்குறதா நினைச்சுக்குவோம். நம்மவீட்டை ரெடி பண்ணினப்புறம், அங்க வாங்க, அடிச்சு ஆடலாம்:-)
Unknown said…
கோயம்புத்தூர்ல கல்லூரில படிச்ச அஞ்சு வருசமும் பொருட்காட்சிக்குப் போயிருக்கோமே... ஆனா (சாப்பிட்ற ஐட்டம் தவிர்த்து) வேற எதுவும் வாங்கினதில்ல... அதெல்லாம் 'காட்சி'க்குதான??? ;-)

ஒன்னு மட்டும் வாங்கினேன்னு நெனைக்கிறேன்...

அரிசியில பேரெழுதி கொடுத்தாங்கன்னு நண்பன் பேரெழுதி அவன் பிறந்தநாளுக்குக் கொடுத்தது மட்டும் ஞாபகம் இருக்கு!!!
லீவுன்னா அப்பல்லாம் மதுரையில் ஒரு மாசம்..கோவை ஒருமாசம்னு இருக்கறது.. அப்ப இங்கயும் பொருக்காச்சி அங்கயும் பொருக்காச்சி போனும்ன்னு அடம் பிடிச்சு சித்தப்பாக்களை சீக்கிரம் வரச்சொல்லி அதுல சுத்து இதுல சுத்து சுத்திட்டு தோடு பாசி வாங்கிக்குவிச்சி.. அட்டையில் செய்த அரங்கெல்லாம் வளைய வந்த நியாபகத்தை நல்லா கிளறிவிட்டுருக்கீங்க.. இப்பவும் நாங்க மாலெல்லாம் அப்படித்தான் சுத்தறம்..வாரம் ஒரு தடவை.. :)
SurveySan said…
//சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், //

naangellaam "ranga raattinam" paakka povom.
Kasi Arumugam said…
அருட்பெருன்க்கோ, முத்துலட்சுமி, சர்வேசன்,

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

சர்வேயரே, ரங்க ராட்டினம் என்பதைத்தான் 'தூரி' [கீழிருந்து மேலே போவதை 'ராட்டின தூரி' என்றும், இடமிருந்து வலம் போவதை 'கொட(குடை)தூரி'] என்று சொல்வோம்.
வாங்கண்ணா, நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.
Kasi Arumugam said…
இளா,

நான் என்ன புதுசாச் சொல்லிட்டேன் //நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.// இதெல்லாம் ரொம்பவே ஓவர் இல்லியா? என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே?
Sanjai Gandhi said…
மால் இல்லாத கொறய தீக்கத்தான் ஸ்பென்சர்காரங்க ஊடு கட்றாய்ங்களாமாம்ல? சரவணா இஸ்டோர்ஸ் கூட வருதாமாம்...
Raj Chandra said…
>>இது நண்பர்கள் மனமகிழ்மன்றம். இங்கே 'அரசியல் பேசாதீர்'ன்னு ஒரு விர்ச்சுவல் போர்டு தொங்குறதா நினைச்சுக்குவோம்

-- Soundls like Maalan :).

Anyway, welcome back.
Kasi Arumugam said…
பொடியன், ஆமாங் சீக்கரம் வந்துடுங், ஆனாலும் எனக்கென்னமோ நம்மாளுக எக்சிபிசன் போறத நிறுத்துவாங்கனு தோண்லீங்.

ராசு, வேணாம் என்னைய வம்புல மாட்டாதீங்க:-) (தம்பிகளா, ராசுவோட கமெண்ட நான் சேக்கல, வேண்டான்னா எடுத்ருங்கோ)
Raj Chandra said…
அய்யோ காசி, வம்பு எதுவும் இல்லை. போர்ட் பத்திப் படிச்சபோது, மாலன் எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது. அவ்வளவுதான்.
Kasi Arumugam said…
இன்னிக்கு WoW (world of women) என்ற எக்சிபிசன் சுகுணா கல்யாணமண்டபத்தில் தொடக்கம். (அதில் எங்க சேவைமேஜிக் ஸ்டாலும் இருக்கும்: விளம்பரம்)

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)