Skip to main content

தமிழ்நாட்டில ச்சூ ச்சூன்னு விளிக்கண்டா

கி்ராஸ்கட் ரோடில் ஸ்டேஷனரிக் கடையில் புத்தகம் (இவர் புத்தக்கக்கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சார்னு் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை, இது த.நா.பா.நூ.நி. வெளியீடு;-) வாங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேட்டன் 'ச்சூ ச்சூ' என்று கடைக்காரரை அழைக்க, அவர் சொன்னது இது. பாலக்காட்டுப் பக்கத்துல ஒருவர் கவனத்தைக் கவர இப்படி ஓசையிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரப்பயணத்தில் போகக்கூடிய இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியை அந்தக் கேரளத்து நண்பரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'சாரி, சாரி' என்று ஏற்கனவே இதை அறிந்தும் மறந்தவர் போல அசடு வழிந்தார்.

'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

Comments

Sanjai Gandhi said…
//நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.//

அப்டியே உக்கடம் பஸ் ஸ்டாண்டு கிட்டக்கா போய் நின்னிங்கனா பொள்ளாச்சி பஸ் நெறய வருங்ணா.. அத்த புடிச்சிகினு பொள்ளாச்சீல போய் எறங்கி ஒரு கடல பொட்டலம் வாங்கிகினு கொறிச்சிகினே நடந்திங்கனா கேரளா வந்துருங்ணா( அல்லது போய்ருவோங்ணா :P )

சாய்ங்க்காலத்துக்குள்ள அல்லா மேட்டரயும் தெரிஞ்சிகினு ஊடு வந்துரலாம்ணே.. :)
Kasi Arumugam said…
பொடீ:-)

கேரளாவுக்குப் போய் விசாரிக்கணும்னா பொள்ளாச்சி வளியாப் போவேண்டியதில்லைங், நேராவே போலாங், ஆனா அதில்லீங் அப்ரோச்சு, அங்கேயே இருக்கற நம்மூர்க்காரங்க வாயால உண்ணங் கொஞ்சம் வெளக்கமாக் கேக்கலாம்னுதேனுங்.

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் க

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் ப