வி றுவிறுவென குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. மலைமுகடுகளின் விளிம்புகள் எங்கும் கருமேகங்கள் குழாம் இட்டிருந்தன. மலையின் பின்புறம் மழை பெய்து கொண்டிருந்ததால், காற்றில் ஈரம் மிகுந்திருந்தது. கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது. "அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா. ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம். ஏ ஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண். "கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அரு...
நம்மூர்ல மழைங்களா?