Thursday, November 1, 2007

கொங்கு செய்திகள் - நவ. 1, 2007

  1. சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார்.
  2. பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.
  3. உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
  4. கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்சி்கள் கொங்கு வட்டார வழக்கிலேயெ அதிகம் இருக்கும்

8 comments:

SP.VR. SUBBIAH said...

நல்ல செய்திகள்தானுங்க சாமி!
தொடர்ந்து போடுவீங்களா?

Kasi Arumugam - காசி said...

வாங்கய்யா,

சந்தோசமுங்க. தினமும் பேப்பர் படிச்சு, மாநிலச் செய்தி கேட்டு முடிச்சா, ஒரு நாலு வரி எளுத சமாச்சாரமா கிடைக்காது? தொடர்ந்து போடுவதாகத்தான் உத்தேசம். பாக்கலாம்.

Anonymous said...

//உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
//

Happy to hear the news.

இளவஞ்சி said...

காசியண்ணே!

செய்திகள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும் பன்ச் லைனையும் சேர்த்துக்கிட்டிங்கன்னா அப்பறம் பின்னாடி நாங்க கூட்டமா வந்து பின்னூட்டத்துல அடிச்சுக்கறது வசதியா இருக்கும்! ஹிஹி...

// பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.//

ஆராய்ச்சி மையமெல்லாம் அளவு பார்த்துதான் கட்டுனாங்களாமா? ஏன்னா பீளமேடு கொசு ஒவ்வொன்னும் பசு சைசுல இருக்கும்!

// கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும்//

சூரியன் FMல சின்னதம்பி பெரியதம்பி கேப்பீங்களா? எனக்கென்னவோ கோவை நிகழ்ச்சிய விட சென்னை பெரியதம்பிதான் இயல்பா இருக்கறமாதிரி இருக்கு. அந்தாளுக்கு குரல்தான் வரம். சரியான ரேடியோ கவுண்டமணி அவரு! :)

enRenRum-anbudan.BALA said...

என்ன காசி, செய்தி வாசிப்பாளரா புது அவதாரமா ? :)

ஆரம்ப காலம் மாதிரி, அப்பப்ப ஏதாவது பதியுங்க!

When I write this comment, I suddenly had a recollection of your 'உப்புமா' related posting ;-)

//
காசியண்ணே!

செய்திகள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும் பன்ச் லைனையும் சேர்த்துக்கிட்டிங்கன்னா அப்பறம் பின்னாடி நாங்க கூட்டமா வந்து பின்னூட்டத்துல அடிச்சுக்கறது வசதியா இருக்கும்!
//
இது தான் நம்ம இளவஞ்சி பன்ச் :)))

எ.அ.பாலா

Kasi Arumugam - காசி said...

இளவஞ்சி,

அதுவும் நல்லாத்தான் இருகும், ஆனா அதுக்கெல்லாம் உக்காந்து யோசிக்கணுமே, இது போற போக்கில அடிச்சுவிடரது. பாக்குறேன்.

எ.அ.பாலா,

:-)

சந்தடி சாக்கில், எனக்கு ஏற்கனவே உப்புமா பதிவர்னு பேர் இருக்கிறத ஞாபகப்படுத்திட்டீங்களே:(

இனிமேல் அதுகூட இல்லை, கருவேப்பிலை பதிவர்தான் சரியா இருக்கும்.:-))

Kasi Arumugam - காசி said...

பஞ்ச்லைன் அட்டம்ப்ட்டு:

சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார்.

(அதே நேரத்தில் வைகோ பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்.) ஹும், எங்கே இருக்கவேண்டியவர் எங்கே!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.
சுத்தியும் சாக்கடைத் தண்ணீர் நிற்க குழி தோண்டும் பணி துவக்கம்

உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
25 வருசத்துக்கு முன் கல் நட்டிய ஈச்சனாரி ரயில்வே க்ராசிங் மேம்பாலம் எததனையாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நடப்புக்கு வரும்னு எங்க தாத்தா கேட்கிறார்

கோவையில் ரேடியோ *மிர்ச்சி* பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்ச்சிகள் கொங்கு வட்டார வழக்கிலேயே அதிகம் இருக்கும்
எந்த 'வட்டார வழக்கில்' அறுத்தாலும் *மொளகாய்* அரைப்பது நம் தலையில்தானே!

(ம்ஹும், தேறுவேனா?)

enRenRum-anbudan.BALA said...

காசி,

தேறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகத் தான் தோன்றுகிறது :)

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், keep trying :)