Skip to main content

பொங்கி வரும் காவேரி.

சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள்.

அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி :

காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி :


கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு :


நுரையாடி வரும் காவேரியன்னை :






















சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் :


முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் :


துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் :


திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் :


வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் :




அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் :


வேத முனி :


வெற்றி முகம் காட்டும் வீரன் :


முன்மண்டபம் :


கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் :


கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு :


திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தின் நுழைவாயில் :




படங்கள் எடுத்து உதவிய நண்பர் திரு. பாலாஜிக்கும், நோக்கியா 3230க்கும் நன்றிகள்.

Comments

ஹ்ம்ம், எங்க ஊர் கோயிலு, சந்தோசம்னாலும், சோகம்ன்னாலும் உக்காந்துக்கிற அந்த படிக்கட்டுகள். நன்றிங்க
இளா ஸார்... ரொம்ப சந்தோஷங்க...
தமிழ் said…
ஒவ்வொரு புகைப்படமும் அருமையாக இருக்கிறது.
அன்பு திகழ்மிளிர்... மிக்க நன்றிகள்...
Anonymous said…
ஈரோட்ல இருக்கும்போதே போகணும்னு ஆசையாயிருந்த கோயில். இன்னும் ஆசை கைகூடலை. படங்கள பாத்தாவது திருப்திப்பட்டுக்கறேன்

இந்தில உங்க பேர் வருதே. ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா என்ன‌
Good Post!

Thanks
அன்பு சின்ன அம்மிணி...
/*
ஈரோட்ல இருக்கும்போதே போகணும்னு ஆசையாயிருந்த கோயில். இன்னும் ஆசை கைகூடலை. படங்கள பாத்தாவது திருப்திப்பட்டுக்கறேன்
*/

நெம்ப சந்தோஷமுங்க... நீங்க ஒருக்கா நம்ம கோயிலுக்கு வந்து பாக்கணுமுங்க.. நெம்ப நல்லாயிருக்குங்க...

/*
இந்தில உங்க பேர் வருதே. ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா என்ன‌
*/

ஒண்ணும் பெருசா இல்லீங்க.. சும்மா தோணுச்சு.. வெச்சிக்கிட்டேங்க...
Dear Sivabalan...

/*
Good Post!

Thanks
*/

Very much Thanks...
Anonymous said…
It brought back so many wonderful memories. Thank you. All the புகைப்படமும் அருமையாக இருக்கிறது.

Rumya
kaleeswaran said…
Dear friend, we have a kuladeivam temple namely karuppanasami koil in kuduthurai. but we not yet go. please search the koil and send the details to me g. i am always thankful to u.
please friend
kaleeswaran
igkalees@yahoo.co.in
Anonymous said…
Hi

Your blog was excellent. U can write also about Siruvani,Poondi, Perur and Marudhamalai too

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)