பச்சைப்பயிறு கடைஞ்சது
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 200 கிராம்,
- சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு,
- தக்காளி - 1,
- வர மொளகாய் - 5,
- கொத்தமல்லி- 2 டீ ஸ்பூன்,
- ஜீரகம் - 1 டீ ஸ்பூன்,
- பூண்டு - 4 பல்,
- கறிவேப்பிலை - சிறிது,
- உப்பு - தேவையான அளவு,
- கடலை எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:
2) ஊறிய பயிறை குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அஞ்சாறு விசில் விட்டு வேக வைக்கவும்.
3) வெந்த பயிறை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
4) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
5) கொத்தமல்லி, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து, பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
6) வாணலியில் எண்ணெய் விட்டு, பொடித்த கொத்தமல்லி, சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
7) தக்காளி நன்கு கரைந்த பின், கறிவேப்பிலை,மசித்த பயிறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
8) சூடான சாதத்தில் தேங்காய் எண்ணெய்/நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
Comments
இருக்கறதைப் பார்த்தால்.................
டன்னலில் கடைசியில் 'ஜோதி' தெரிகிறது:-)))))
ஹூம்.......கொடுத்துவச்ச மகராசிகள்:-))))))))))
தேங்காயெண்ணெய் சேக்காம கொங்கு நாட்டு சமையல் கிடையாது. ஏம்பா ldc/hdc பத்தியெல்லாம் நாப்பது வயசுக்கப்புரம் யோசிக்கலாம். இப்போதைக்கு அநுபவிங்க தம்பிகளா.
எப்பிருந்து இந்தக் கத நடக்குதூ?
வாரக்கடைசியில பச்சப்பயறு கடைஞ்சது செஞ்சு சாப்பிட்டிட்டு அசத்தீடுங்கோ...
பிரமாதம் போங்கோ. தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய. நல்லெண்ணெய் தேவலை. ஓரளவுக்கு நல்லது//
வாங்கய்யா ராகவனாரே...
நம்மூர்ல தேங்காண்ணையும்,கடலெண்ணையும் தான் முக்கா வாசி சமையலுக்கு.மலையாள தேசத்துக்குப் பக்கத்தால இருக்கிறதால இந்தத் தேங்காண்ணெய் உபயோகம் வந்திருக்கலாம்.
கொஞ்ச நாளா மகனர் குலங்கள் சமையல் குறிப்பை வீளாசித்தள்ளிக்கிட்டு
இருக்கறதைப் பார்த்தால்.................
டன்னலில் கடைசியில் 'ஜோதி' தெரிகிறது:-)))))..ஹூம்.......கொடுத்துவச்ச மகராசிகள்:-))))))))))//
அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லீங் டீச்சர்.டன்னலில தெரியற ஜோதி எதுக்கால வார சேரன் எக்ஸ்பிரசோட ஹெட் லைட்டாக் கூட இருக்கலாமுங்கோ...:-)))
>>>தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய.
தேங்காயெண்ணெய் சேக்காம கொங்கு நாட்டு சமையல் கிடையாது. ஏம்பா ldc/hdc பத்தியெல்லாம் நாப்பது வயசுக்கப்புரம் யோசிக்கலாம். இப்போதைக்கு அநுபவிங்க தம்பிகளா. //
அண்ணன் சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னேன்...
அட, மண் வாசனை!
எப்பிருந்து இந்தக் கத நடக்குதூ?//
வாங்க..வாங்க..பொங்கல்ல ஆரம்பிச்சதுங்...
வறுக்காம குக்கர்ல வெச்சா கொசகொசன்னு வருது.
வறுத்து குக்கர்ல வச்சா வேகுவனாங்குது.
ஆன்சைட்ல இருக்கும்போது பச்சபயறு சமைக்க ஆசப்பட்டு மண்டை காஞ்சதுதான் மிச்சம்.
இப்ப ஊருக்கு போகும்போதெல்லாம் பச்சப்பயறு கண்டிப்பா மென்யுவில இருக்கும்.
இன்னொன்னு, பச்சபயறு, கொள்ளுப்பயறு, தட்டைபயறு இதெல்லாம் விரும்பி சாப்பிடறவங்களோட செல்லப் பேரு என்ன தெரியுமா?
//Its very yummy with pavakkai or vendaikkai porial.. I miss it//
சேம் பிளட்...
பெத்தராயுடு:
//அட ட்ரிக்கு வறுத்து ஊற வெக்கறதுல இருக்கா?//
அதே..அதே..சபாபதே....
//பச்சபயறு, கொள்ளுப்பயறு, தட்டைபயறு இதெல்லாம் விரும்பி சாப்பிடறவங்களோட செல்லப் பேரு என்ன தெரியுமா?//
தெரியலையே..???
எல்லோரும் இப்படி பொங்குற மணிகள் ஆய்டா...நாங்களெல்லாம்
ஹாலில் வொக்காந்து பேப்பர் படிக்கலாமுங்களா? 'சூடா ஒரு கப் காபி...!' அப்டீன்னு? ரொம்ப நாள் ஆசை...ஹி..ஹி..
இவஞ் செரியான 'பருப்பு முத்தண்ணனா' இருக்கறான் அப்படிம்பாங்க.