Saturday, July 28, 2007

கொங்கு வட்டார வழக்கு - ‍மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை.

பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது.

இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம்.

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக் கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

8. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. தாரை - பாதை. எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

9 comments:

TBCD said...

நமக்கு தெரிஞ்சதெல்லாம்..."ன்னா, என்னங்கன்னா"... அவ்வளவு தான்...இது போல யாரவது மதுரை சொற்கள் தொகுத்தா நல்லா இருக்கும்..

திகழ்மிளிர் said...

சீமாறு-விளக்குமாறு
கொட்டம்-காலியன இடம்,சமையலறை
இறவாரம்-வீட்டின் கூரையின் உட்பகுதி
சொள்ளை-கொசு(திராவிடச்சொல்-கன்னடம்)
தப்பரது-துணி துவைத்தல்

இன்னும் எண்ணற்றவை
சொல்வது எனறால்
நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்...
நானும் கொங்குவாசலில் எழுதவிரும்புகிறேன்.

கொங்கு மக்கள் said...

திகிழ்மிளிர்:
konguvaasal@gmail.com என்னும் முகவரிக்கு ஒரு மடல் அனுப்ப முடியுமா??

Anonymous said...

சூரி - காய் கறி நறுக்கும் கத்தி
சுல்லி - அடுப்பு எரிக்க பயன்படும் காய்ந்த சிரிய ரக குச்சிகள்
கட்டி அழுதல் - கட்டிபிடித்து ஒப்பாரி வைத்தல்( சாவு வூட்ல கட்டி அழுதுபோட்டு வந்தேன்)
எதாச்சும் - ( எதாச்சும் செஞ்சு கடன அடை)
அடப்பு - ( சாவு வூட்ல அடப்பு இருக்கு)
செம - ரொம்ப பெரிய ( செமப் பெருசுடா அவுங்க காடு)
- சுமத்தல்/தாங்குதல் ( அவன் பையன் குடும்பத்த நல்ல செமக்குறான்

Ranga said...

podakkali - Puzhakkadai
aruga manai - Arivaalmanai
Rakkiri - keerai
enathukku? - Ethatku?
Kkoru - Utkaru
korangup pedal - a typical riding posture of bicycle
dumeel udraan - poi solgiraan
thiruvaathaan - madaiyan
thellavaari - Oor sutrupavan, porukki,
ngokkaaloli - oru ketta vaarthai..
Adiseruppulanjadi - Adi + Seruppula + Anju + adi!
Damaasu - Nagaichuvai..
Pottatta - W/O trouble
nemba - Niraiya
akkaanga - Ammanga


Inimael miga mukkiyamaanavai- Orei!!
Dakaaltti..

Adan gonniyaa...

Adra sakkai...adra sakkai...adra sakkai..

Adang gokkaa makkaa...

Guntalaesinaandaa

etc..

Hello maplaihalaa...

Naanum kongu naadudhaan...Udumalai pakkam oru giraamam..Vivasaayak kudumbam..Vaelai paarpadhu Mysore la..

Aana summa sollak kudaadhu...kalakkareengappaaa..

Anbudan..

Rangaraj

Ranga said...

podakkali - Puzhakkadai
aruga manai - Arivaalmanai
Rakkiri - keerai
enathukku? - Ethatku?
Kkoru - Utkaru
korangup pedal - a typical riding posture of bicycle
dumeel udraan - poi solgiraan
thiruvaathaan - madaiyan
thellavaari - Oor sutrupavan, porukki,
ngokkaaloli - oru ketta vaarthai..
Adiseruppulanjadi - Adi + Seruppula + Anju + adi!
Damaasu - Nagaichuvai..
Pottatta - W/O trouble
nemba - Niraiya
akkaanga - Ammanga


Inimael miga mukkiyamaanavai- Orei!!
Dakaaltti..

Adan gonniyaa...

Adra sakkai...adra sakkai...adra sakkai..

Adang gokkaa makkaa...

Guntalaesinaandaa

etc..

Hello maplaihalaa...

Naanum kongu naadudhaan...Udumalai pakkam oru giraamam..Vivasaayak kudumbam..Vaelai paarpadhu Mysore la..

Aana summa sollak kudaadhu...kalakkareengappaaa..

Anbudan..

Rangaraj

velarasi said...

அன்புடையீர்,என்னுடைய பதிவிலிருந்தும் வழக்குச் சொல் பகுதியை எடுத்து போட்டு கொள்ளவும்

easwara said...

hi,

very good one, still i am using this type words,
best wishes,
Easwaramoorthi Subrmaniam,
System administrator
Chennimalai,
erode

Anonymous said...

அக்காமுங்க - ஆமாங்க (கோபி பக்கம்)

முட்டிட்டான் - ஓடிவிட்டான். அவன் சந்துல முட்டிட்டான் - சந்து வழியே ஓடி விட்டான் (ஈரோடு பக்கம்)

ரோதனை - கொடுமை, நச்சரிப்பு, டார்ச்சர். இவனுக ரோதன தாங்கல