Sunday, July 29, 2007

இவிங்களத் தெரியுமுங்களா...?

இவிங்களத் தெரியுமுங்களா...?

தெரிஞ்சதுன்னா அட்ரச சொல்லிப்போட்டு போங்க... ஏதோ பேமசான டயலாக்கெல்லாம் சொல்லீருக்காக போல! கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னுதேன்...


1. காரமடை ரங்கநாதன்

2. அம்சவேணி பழனிச்சாமி

3. குஞ்சு கவுண்டர்

4. தவசி5. நாகராஜசோழன் M.A.

6. கோபால், LIC ஆபீசர்

7. பன்னிக்குட்டி ராமசாமி8. பழனி சக்திவேலு9. கமலி
10. கோவாலு

11. பாக்கியலச்சுமி

12. ஒத்த மீசை குப்புசாமி

13. வைத்தீஸ்வரி

14. செம்புலி

15. நீலவேணி16. ராசப்பா

17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம்

18. காளிங்ஸ்

19. வெங்குடான்

20. குண்டலகேசி

24 comments:

"ஆல் இன் ஆல்" அயகுராசா said...

போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு??

Chellamuthu Kuppusamy said...

அதெல்லாம் இருக்கட்டும்ங்க இளவஞ்சி. இந்த 'உக்கடம்' போட்டோ நீங்க புடிச்சதா? மீன் மார்க்கெட்டுக்கு தெக்கால, பஸ் ஸ்டாண்டுக்கு மேபுறம் இருக்குதே..அந்த ஏரிதானுங்க?

ILA(a)இளா said...

கைப்புள்ளையும் விட்டுப்போயிருச்சே.

நாமக்கல் சிபி said...

2. திருமதி பழனிச்சாமி

4. சின்னக் கவுண்டர்

5. அமைதிப்படை அமாவாசை

9. காதல் கோட்டை தேவயாணி

10. சின்னவீடு - பாக்யராஜ்

11. சதிலீலாவதி - கல்பனா

13. எஜமான் - மீனா

14. ராசுக்குட்டி - பாக்யராஜ் பி.ஏ

G.Ragavan said...

// "ஆல் இன் ஆல்" அயகுராசா said...
போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு?? //

// ILA(a)இளா said...
கைப்புள்ளையும் விட்டுப்போயிருச்சே. //

அதுக்குக் காரணம்...அவங்க ரெண்டு பேரும் பாண்டி நாடு. கொங்கு நாடு கெடையாது.

சரிதானா இளவஞ்சி?

இளவஞ்சி said...

"ஆல் இன் ஆல்" அயகுராசா,

// போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு?? //

மிஸ்டர் கவுண்டபெல், நல்லா படிங்க! மொதபேருல ஒளிஞ்சு இருக்கறது யாரு?

செல்லமுத்து,

// இந்த 'உக்கடம்' போட்டோ நீங்க புடிச்சதா? //

நானில்லீங்... நம்ம ராசான்னு நினைக்கறேன்!

// மீன் மார்க்கெட்டுக்கு தெக்கால, பஸ் ஸ்டாண்டுக்கு மேபுறம் இருக்குதே..அந்த ஏரிதானுங்க? //

அதே! அதே! தண்ணி எப்படி தளும்புது பார்த்தீங்களா! காணக்கிடைக்காத காட்சி! :)

இளா,

கைப்புள்ள பக்கத்து நாடு! கொங்கு நாட்டுள்ளால ஏதாச்சும் வேசங்கட்டியிருந்தா சொல்லுங்க.. கோர்த்து விட்டுறலாம்! :)

இளவஞ்சி said...

சிபியாரே,சொன்னவரைக்கும் உமது விடையெல்லாம் கரெக்கிட்டுதேன்! ஆனா ஒத்துக்கபட மாட்டாது!

அவிங்க சொன்ன ஃபேமசு டயலாக்கோட சொன்னாத்தேன் ஃபுல் மார்க்கு! :)

ஜீரா,

// பாண்டி நாடு. கொங்கு நாடு// கேக்கவே புல்லரிக்குது! அடுத்தவாரம் வீக்கெண்டுல அண்டைநாடான பாண்டிநாட்டுக்கு படையெடுத்துருவமா?! :)))

சிநேகிதன்.. said...

18 - மேட்டுக்குடி கவுண்டமணி (அடங்கொன்னியா!!)

Anonymous said...

இவிகள்ல நமக்குத்தெரிஞ்சவங்கள முதல்லியே எல்லாரும் சொல்லிப்போட்டாங்க. இனி எனத்தப்பண்ணறது. விடைகள் எப்போன்னு பாத்துட்டு இருக்கவேண்டியதுதான்

இளவஞ்சி said...

சினேகிதன்,

அது! மீதி 19யையும் சாய்சுல விட்டுப்போட்டிங்களா?! வெளங்குனாப்புலதானுங்.. :)

சின்ன அம்மிணி,

சிபியாரு பேருமட்டுந்தேன் சொல்லியிருக்காரு. நீங்க சும்மா ஒக்காந்திருக்காம அதுக்கெல்லாம் வசனத்த புடிங்க... அப்பறமா யூட்ட்யூப்புல படத்தை தேடி சேர்த்து விட்டுருவோம்! :)

வவ்வால் said...

2)பழனிசாமி- கட்டினா ஒரு டீச்சர் பொண்ணத்தான் கட்டுவேன்!
4) தவசி- தோள்ல துண்டப்போட்ட தீர்ப்பு சொல்ல போரார்!
5) ராஜராஜ் சோழன் - சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ!
6) கோபால் - எப்படி புடிச்சு எழுதினாலும் இந்த விரல்ல மட்டும் இங் ஒட்டிகுதுபா!
7) பன்னிகுட்டி ராமசாமி - அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
8)பழனி சக்திவேலு - என்ற வூட்டுகாரர் ட்ராக்டர் .. அதன் எலும்புலாம் ஒடைஞ்சா கடுப்போடுவாஙலே அது ...
9)கமலி - இதயத்துல்ல ஆரம்பிச்சு கண்ணுல முடியுர காதல் எங்களுது ...

மீதியா யாராவது வந்து சொல்லுங்கப்பா அம்புட்டு தான் நமக்கு தெரியும்!

கைப்புள்ள said...

"எது என்ன தெரியாதா...நான் இதே ஊரு தான்யா. எட்டு வருஷமா இதே ஊருல தான் இருக்கேன்"

"என்னை என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா...எட்டு வருசமா எனக்கு தெரியாம இந்த ஊருல எந்த சந்துலடா இருந்தே? சைக்கிள் கெடையாது"

"ஏன்யா நான் இந்தியநாட்டைச் சேர்ந்த ஒரு பிரஜை எனக்கு சைக்கிள் இல்லையா?"

"உன் பேரு என்னப்பா"

"காரமடை ரங்கநாதன்"

"ரங்கநாதங்கிற பேருக்கெல்லாம் சைக்கிள் குடுக்கறதில்ல"

"தர மாட்டே?"

"எட்டி ஒதைக்கிறதுக்குள்ள ஓடிப் போயிரு"

கைப்புள்ள said...

"ஹை ஐ ஆம் குண்டலகேசி...வாட் இஸ் யுவர் நாம்"

"மந்தாகினி"

"ஸ்வீட் நாம்"

-------------------------

"மாப்பிளை என் சவுத் இந்தியன் டயானாவை ஒரு தரம் வந்து பாருப்ப்பா"

"கொஞ்சம் இருப்பா ரொமான்ஸ் பண்ணிட்டு வந்துடறேன்"

"இவனுக்குண்டான கெட்ட பழக்கமே இதான்...தேவையான நேரத்துல காணாமப் போயிடுவான்"

கைப்புள்ள said...

"தோள்ல இருக்கற மேல்துண்டு எறங்கற வரைக்கும் தான் நான் மனுசனா இருப்பேன்" - something like that...சின்னக் கவுண்டரில் தவசி

கைப்புள்ள said...

பன்னிக்குட்டி ராமசாமி : "செட்டியார் மதர்"

கைப்புள்ள said...

இதையும் கொஞ்சம் பாருங்ணா...

நல்ல கருத்துள்ள பதிவு

delphine said...

கோபால், LIC ஆபீசர்///
எங்கிட்ட வீட்டுக்கு லோன் வாங்கித்தர்ரேன் என்று சொல்லிட்டு காணாமப்போனவர். கண்டு பிடிச்சு கொடுங்க..

Anonymous said...

1. காரமடை ரங்கநாதன்
வைதேகி காத்திருந்தாள்
க.மணி: உன் பேரு என்ன?
: காரமடை ரங்கநாதன்
க.மணி: காரமடை ரங்கநாதனுங்குற பேருக்கெல்லாம் சைக்கிள் தரதில்ல.

2. அம்சவேணி பழனிச்சாமி
திருமதி பழனிச்சாமி

3. குஞ்சு கவுண்டர்
ராம்கி,க.மணி மற்றும் சங்கவி நடித்த படம்.

4. தவசி
சின்னக்கவுண்டர்.

5. நாகராஜசோழன் M.A.
அமைதிப்படை
நாகராஜசோழன் M.A. s/o Rajendra solan GS/o Rajaraja solan.
என்ன ஒரே ராஜாக்கள் பேரா சொல்லுரீங்க

7. பன்னிக்குட்டி ராமசாமி
சூரியன்
க.மணி: இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா

10. கோவாலு
சின்ன வீடு
கோவை சரளா: அட கோவாலு,

11. பாக்கியலச்சுமி
சின்ன வீடு
கல்பனா

16. ராசப்பா
புது மனிதன்
க.மணி: தாளத்தோட பீத்தப்பொண்ணு இல்ல மூத்தபொண்ணு

17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம்
க.மணி: சார்,பயில்வான் பாலகுருன்னு ஒரு பன்னிப்பய வீட்டுல குடியிருந்தேன் சார்.

18. காளிங்ஸ்
காளிங்ஸ் அவங்க சிரிச்சது உங்களப்பாத்துதான்

19. வெங்குடான்
இன்று போய் நாளை வா
ஏய் குருவா!!

இளவஞ்சி said...

வவ்வால்,

8 மார்க்கு! அருமை! :)

டாக்குடரு சம்சாரம் இதவிட இன்னொரு அருமையான டயலாக்கு க்ளைமாக்சுல சொல்லுவாங்க! அது என்ன? :)

கைப்புள்ள,

இருந்தாலும் உமக்கு இவ்வளவு மெமரி இருப்படாது! அப்படியே... கதைவசனம் புத்தகத்த படிக்கற கணக்கா புட்டுப்புட்டு வைக்கறியேயப்பு! :) உம்ம பதிவுக்கான சுட்டிக்கு நன்றி!

இளவஞ்சி said...

delphine,

// எங்கிட்ட வீட்டுக்கு லோன் வாங்கித்தர்ரேன் என்று சொல்லிட்டு காணாமப்போனவர். கண்டு பிடிச்சு கொடுங்க //

ஆளு பகல்ல வள்ளுவரு கோட்டம் பக்கத்துல சுத்தறதா காத்துவழி நியூசு! :)

அனானி,

யாரைய்யா நீர்? இத்தனையும் புட்டுப்புட்டு வைச்சுட்டு பேரைக்கூட சொல்லாம போயிருக்கீரு! இதுக்கே உமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும்! சீக்கிரம் பேரோட வாங்க!

வெங்குடான் கண்டுபுடிச்சிருக்கீருன்னா நெசமாவே அது தெறமதேன்! :)

இளவஞ்சி said...

மிச்சமிருக்க ஆளுங்க... Any Takers?!

3. குஞ்சு கவுண்டர்

12. ஒத்த மீசை குப்புசாமி

15. நீலவேணி

20. குண்டலகேசி

நான் அவன் இல்லை said...

12. ஒத்த மீசை குப்புசாமி
- நானே ராசா நானே மந்திரி - இஸ்கலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பர கொய்யா - மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்

15. நீலவேணி - மிசஸ்.சரவணன்(s/o பழனிச்சாமி) - அருள் படத்தில்.

குஞ்சுகவுண்டரும்,குண்டலகேசியையும் கண்டுபுடிச்சுட்டாங்கோவ்...

रा. वसन्त कुमार्. said...

ஏங்க... என்னையும் சேத்துக்குவீங்கள..?

இளவஞ்சி said...

நான் அவன் இல்லை,

நீர் தான் முன்ன வந்த அனானியா? உம்ம ஜெனரெல் நாலெட்ஜை அடிச்சுக்கவே முடியாது போல! :)

रा. वसन्त कुमार्.,

konguvaasal@gmail.com கு ஒரு மெயில் தட்டுங்க! :)