Skip to main content

கோவை-சேலம் தொழிற்சிறப்பு சாலை (Industrial Corridor of Excellence)


இருவாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையின் படி முதல் கட்டமாக சென்னை-மணலி-எண்ணூர், செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் ஆகிய சாலைப்பகுதிகள் தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கோவை-சேலம், மதுரை-தூத்துக்குடி சாலைப்பகுதிகளும் இரண்டாம் கட்டமாக தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தபப்டும் என்று சொல்லப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட அரசாணையின் படி கோவை-சேலம் சாலையின் நடுப்பகுதிகளான திருப்பூரும் ஈரோடும் (தேசிய நெடுஞ்சாலையில்ருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும்)மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது இந்த திட்டத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது. இந்தியாவிலேயே ஒரு 160 கிலோமீட்டர் தொலைவுக்குள் நான்கு மாநகராட்சிகள் வேறு எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காவிரி பாயும் ஈரோடின் சுமார் 10-20 கிமீ பகுதியைத்தவிர்த்து இந்த 160 கிமீட்டருமே இயற்கை ஏய்த்துவிட்ட வறட்சியான பகுதிகளே. இந்த வறட்சியே இப்பகுதி மக்களின் தொழில் ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணி. பெரும்பாலும் எந்த மத்திய-மாநில அரசுகளின் நிறுவனங்கள் (சேலத்தில் மட்டும் சில இருக்கின்றன)இல்லாமல், அம்பானிகள், டாட்டாக்கள், பிர்லாக்களின் முதலீடு இல்லாமல் உள்ளூர் மக்களின் முனைப்பினாலே முனேறிய பகுதிகள் இவை. இப்போதாவது அரசுகள் எதாவது செய்ய நினைத்தால், இரண்டாம் கட்டத்துக்கு தள்ளிவைக்காமல் முதல் கட்டத்திலேயே இந்தப் பகுதியையும் எடுத்து மேம்படுத்த வேண்டும். முக்கியமாக புதிய மாநகராட்சிகளுக்கு எல்லை முடிவு செய்வதிலிருந்து, அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துவதிலிருந்து, பெரிய அளவில் திட்டமிட ஒரு பொது அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதாள சாக்கடை, நிலத்தடி மின்கம்பிகள், ரயில் பாலங்கள், நீர் வடிகால், பஸ்/ரயில்/விமான நிலையங்கள் போன்றவற்றிற்கு நகரிய ஆய்வு நிறுவங்கள்/ பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து தரநிர்ணயங்கள் ஏற்படுத்தவும், அவற்றின் அமலாக்கத்தை உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையங்களையும் ஏற்படுத்தினால், புதிதாக அமைக்கப்படும் சாலைகள், குடியிருப்புகளாவது எத்ரிகாலத்துக்குத் தகுந்த வகையில் இருக்கும். இல்லாவிட்டால் அங்கேயும், 'கட்டப்படும் இடிக்கப்படும்' கதையாகிவிடும்.

ஏற்கனவே (பெயருக்கு) மாநகராட்சிகளாக இயங்கும் கோவையிலும் சேலத்திலுமே இன்னும் இவை சரியாக செய்யப்படாத பொது புதிதாக அமையும் ஈரோடு திருப்பூர் மேல் பெரிதாய் நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் ஈரோடு திருப்பூர் மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி வைப்போம்.

தொடர்புடைய சுட்டிகள்:
Indian Express on Industrial Corridor of Excellence
Webindia123.com on Upgradation of Municipalities

Comments

மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னாலும், பண ஒதுக்கீடு மற்றும் தேர்தல் சமயங்களில் அனுகூலம் உண்டு. அவ்வளவுதானோ? வாழ்த்துக்கள் மக்களே
Prabakar said…
what ila had said i true.. its nice to see a article about my place ..

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)