கொங்குதேசம் அல்லது கொங்குநாடு''ன்னு பொதுவா சொல்றது, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையே பெரும்பாலும் குறிச்சாலும், அதன் பரப்பளவு கொஞ்சம் விஸ்தாரமானதுங்க. இன்னைக்கு பல்வேறு மாவட்டங்களா தாலுக்காவா பிரிஞ்சிருக்கிற 'பழநி, தாராபுரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், ஈரோடு, தர்மபுரி, சத்யமங்கலம், நீலகிரி, அவிநாசி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, இப்படி எல்லா ஊர்களையும் உள்ளடக்கியது தான் கொங்குநாடு.
தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மட்டுமில்லாம, ஹவுசல்ய மன்னர்களும் முகம்மதிய மன்னர்கள் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த கொங்குதேசம், 1799ல திப்புசுல்தானோட வீழ்ச்சிக்கு அப்புறம் கிழக்கிந்தியகம்பெனியின் துனையோட மைசூர்மஹாராஜா'வோட ஆள்கைக்கு உடபட்டு இருந்ததுச்சுங்க.
அப்புறம் மொத்தமாக ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டுக்கு வந்து 1804ல ஒரே மாவட்டமாக ஒரே மாவட்டஆட்சியரோட அதிகாரத்துக்கு வந்துச்சுங்க.
பிற்ப்பாடு பல்வேறு ஆட்சி காரணங்களுக்காக, அது பல மாவட்டங்களா, தாலுக்காவா பிரிக்கப்பட்டது. இன்னைக்கு பல்வேறு தனிதனி அடையாளங்களோட இந்த ஊர்கள் இருந்தாலும், இன்னமும் அந்த 'கொங்குவாசம்' எல்லா ஊர்லயும் மிச்சமிருக்குதுங்க.
கொங்குநாடு'ங்கிற பேரு 'கொங்கு' அதாவது 'தேன்'ங்கிற வார்த்தையில இருந்து வந்ததாக சொல்றாங்க. (பள்ளிகூடத்துல படிச்ச 'கொங்குதேர் வாழ்க்கை..' ஞாபகம் இருக்குதுங்களா?). தேனீக்கள் நிறைஞ்ச பூஞ்சோலைகள் அடர்ந்த இடம்ன்னும், தேனீக்கள் போல சுறுசுறுப்பாக உழைக்கும் மக்கள் நிறைந்த இடம்ன்னு, ஓவ்வொருத்தரும் அவங்க அவங்க ஆசைக்குக்ம், கற்பனைக்கும் தகுந்த மாதிரி விளக்கமும் கொடுக்கறாங்க.
சில வரலாற்று ஆசிரியர்கள் இதையே வேற மாதிரியும் சொல்றாங்க. காங்கேயம்'ங்கிற ஊரை (காங்கேயம் காளை கேள்வி பட்டிருப்பீங்களே) தலைநகரா வச்சு அதை சுத்தியுள்ள பிரதேசத்தை காங்கேயநாடு அல்லது கங்கநாடு'ன்னு சொல்லபோயி, அது நாளைடைவில பெயர் மறுவி 'கொங்குநாடு'ன்னு ஆயிட்டதா சொல்றாங்க.
தமிழகத்தோட ஜீவநதியான காவேரியும், அந்த காவேரிக்கு தமிழகத்துல வலு சேர்க்கிற நொய்யல், பவானி, அமராவதி'ங்கிற பல ஆறுகள் குறுக்கே பாயற பிரதேசம்ங்கிறதால, கொஞ்சம் செழிப்பான பிரதேசமாத்தாங்க கொங்குதேசம் இருந்திருக்கு. இன்னைக்கு நம்மூர் ஆத்துல எல்லாம் தண்ணிய விட மணல்லாரி தான் ஜாஸ்த்தி ஓடுதுங்கிறது தான் உண்மைன்னாலும், முன்னே ரொம்ப செழிப்பா இருந்த்திருக்கு. இப்பவும் தமிழகத்தின் செழிப்பான பகுதிகள்ல கொங்குதேசத்துக்கு உட்பட்ட இடங்கள் தான் பிராதணமானது. இதை வச்சு தான்.
" கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.
கொங்கில் வாழான் எங்கும் வாழான் "ன்னு எல்லாம் முன்ன சொல்லிவச்சாங்க போல.
சங்ககாலத்துல இருந்து இருக்கிற கொங்குதேசத்தோட வரலாற, அவ்வளவு சுளுவா ஒரு நாலு பத்தியில சொல்லமுடியாதுதான். இருந்தாலும் ஒரு ஆர்வத்துல எழுதியாச்சு. யாராவது கொங்குவரலாற்றுல ஆர்வமிருக்கிறவங்க இருந்தா, அப்படியே நூல் புடிச்சு உசரமா பறக்க விடுங்க பார்க்கலாம்.. :)

Comments
http://konguvellalagounderhistory.blogspot.com/
http://konguhistory.blogspot.com/
http://swadesipon.blogspot.com/
இதெல்லாம் எனது படைப்புகள். கொங்க சரித்திரம் பற்றி....பார்த்துட்டு சொல்லுங்க...
FYI...அந்த கங்கநாடு என்பதனை propose பண்ணுனது அடியேந்தான்! பல strong evidences இருந்தும்.....
சரி சரி....இந்தப் பாரதநாட்டுல சரித்திரமெழுத ஆதாரத்தவிட அரசியல்தான பிரதானமா இருக்குது! :(
கங்க நாடு மைசூர் இருக்கு னு சொல்லறார்
விளக்கம் கொடுங்கள் பூழி நாடு எது
கொஞ்சம் பேசிட்டன் அவரே சொல்லுங்க bro